தற்போதைய உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சின் மிகச்சிறந்த இணை அஷ்வின் மற்றும் ஜடேஜா. சந்தேகத்திற்கே இடமில்லாமல் இவர்கள் அற்புதமாக சுழற்ப்பந்து வீச்சில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
இந்திய அணி இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் 23 வருடத்திற்கு பின்னர் தொடரை வென்றது. அதற்க்கு முக்கிய காரனம் இந்த சுழல் இணையே. ஆனால் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஷ்திரி இருவரையும் ஒரே நேரத்தில் அணியில் விளையாட வைப்பது முடியாத காரியம் என தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
அஸ்வின் மற்றும் ஜடேஜாவை எப்போது அணியில் வைத்து விளையாடுவது கடினம். இன்னும் இரண்டு ஆண்டுகள் உலகக்கோப்பைக்கு நேரம் இருக்கிறது.
இதனால், அஷ்வினுக்கு மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவருக்கு டெஸ்ட் போட்டியில் முக்கியத்துவம் இருக்கு வேண்டும்.
இலங்கை உடனான் ஒருநாள் தொடரில் இந்திய தரப்பில் விளையாடிய ஸ்க்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் யுஜவேந்திர சகால் என அனைவருமே நன்றாகத் தான் ஆடிவருகின்றனர்.
அஸ்வின் கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து 20 டெஸ்ட் போட்டிகளில் 1014 ஒவர்கள் வீசியுள்ளார். அதில் அற்புதமாக 26.06 சராசரியில் 116 விகக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதே நேரத்தில் ஜடேஜா, 16 டெஸ்ட் போட்டிகளில் 855 ஓவர்கள் வீசி 23.47 சராசரியில் 87 விக்கெட்டிகளை வீழ்த்தியுள்ளார்.
ஆனால், ஒருநாள் தொடரில் கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் சொதப்பலாகத் தான் செயல்பட்டு வருகிறனர். 11 ஒபட்டிகளில் ஆடியுள்ள அஷ்வின் மோசமான 55 சராசரியில் 10 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
அதே போல் ஜடேஜா, 15 போட்டிகளில் 67.09 சராசரியில் 11 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இதன் காரணமாகவே இருவரும் ஆஸ்திரேலியத் தொடரில் அணியில் இருந்து கலட்டி விடப்பட்டுள்ளனர்.
மேலும், இந்திய அணியில் இருந்து யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற முன்னனி வீரர்களும் கலட்டி விடப்பட்டது குறிப்பிடத்த்ககது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடயேயான ஒருநாள் போட்டிகளில் சென்னையில் வரும் 17ஆம் தேதி துவங்குகிறது. அதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி : விராத் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், கே.எல் ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்க்யா ராகானே, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் அப்டேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமர், உமேஷ் யாதவ், முகமது சமி