ஐபிஎல் வரலாற்றின் தலைசிறந்த பேட்ஸ்மேன் தோனியா..? ஏபிடி வில்லியர்ஸா..? தயக்கமில்லாமல் பதிலளித்த முன்னாள் CSK வீரர் !! 1
ஐபிஎல் வரலாற்றின் தலைசிறந்த பேட்ஸ்மேன் தோனியா..? ஏபிடி வில்லியர்ஸா..? தயக்கமில்லாமல் பதிலளித்த முன்னாள் CSK வீரர்..

15 வருட ஐபிஎல் வரலாற்றின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஏபிடி வில்லியர்ஸா அல்லது மகேந்திர சிங் தோனியா என்ற கேள்விக்கு தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் இம்ரான் தாஹிர் பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தனக்கென தனி முத்திரை பதித்த இரண்டு மிகப்பெரும் ஜாம்பவான்கள் என்ற வரிசையில் இடம் பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபிடி வில்லையர்ஸும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த எளைட் வீரர்(Elite Players) என்ற வரிசையில் இடம்பெற்ற இரண்டு ஜாம்பவான்களாவார்கள்.

ஐபிஎல் வரலாற்றின் தலைசிறந்த பேட்ஸ்மேன் தோனியா..? ஏபிடி வில்லியர்ஸா..? தயக்கமில்லாமல் பதிலளித்த முன்னாள் CSK வீரர் !! 2

தோனி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய இருவருக்கும் தனித்தன்மை வாய்ந்த பல விஷயங்கள் இருந்தாலும் கிரிக்கெட் வட்டத்தில் எப்பொழுதும் இரண்டு சிறந்த வீரர்கள் மத்தியில் ஒப்பிட்டு பேசுவது வழக்கம். அந்த வகையில், தோனி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் உடன் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் இம்ரான் தாஹிரிடம் ., 15 வருட ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் யார்..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ஏபி டி வில்லியர்ஸ்

அதற்கு பதில் அளித்த இம்ரான் தாஹிர் , நீங்கள் இந்த கேள்வியின் மூலம் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளீர்கள். ஆனால் என்னை பொருத்தவரையில் ஏபிடி வில்லியர்ஸை தவிர்த்து மற்ற எந்த ஒரு சிறந்த பேட்ஸ்மேனையும் நான் பார்த்தது கிடையாது, அதனால் நான் அவரை தேர்ந்தெடுக்கிறேன். அவரை தவிர்த்து ஒரு மிகப்பெரிய வீரராக நான் யாரையுமே பார்க்கவில்லை, அவர் பினிஸராக களமிறங்கினாலும் சரி.. அல்லது ஒரு இன்னிங்ஸ் கட்டமைத்தாலும் சரி.. அல்லது துவக்க வீரராக செயல்பட்டாலும் சரி.. அனைத்திலுமே அவர் சிறந்த வீரர். என்னுடைய கிரிக்கெட் கரியரில் ஏபிடி வில்லியர் ஸை தவிர்த்து சிறந்த வீரர் என நான் யாரையும் பார்க்கவில்லை” என்று இம்ரான் தாஹிர் தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் வரலாற்றின் தலைசிறந்த பேட்ஸ்மேன் தோனியா..? ஏபிடி வில்லியர்ஸா..? தயக்கமில்லாமல் பதிலளித்த முன்னாள் CSK வீரர் !! 3

கேப்டன் என்ற வரிசையில் தோனியை அசைக்க முடியாது என்றாலும் பேட்ஸ்மேன் என்ற வரிசையில் தோனியை தவிர்த்து சிறப்பாக செயல்படும் வீரர்கள் உள்ளனர் என்பதை தெரிவிக்கும் வகையில் இம்ரான் தாஹிர் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *