இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தற்போது விளையாடி வரும் போட்டிக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக சிறப்பாக தன்னுடைய பணியை செய்து வருகிறார். தொடர் நடைபெறுவதற்கு முன்பாக அவர் கூறியதைப் போல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார்.
பிரித்திவி ஷா முதல் மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ( 43 மற்றும் 49 ரன்கள் ) மிக சிறப்பாக விளையாடினார். அதேபோல இஷன் கிஷன் தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த முதல் போட்டி வாய்ப்பில்லையே 40 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

தீபக் சஹர்சிறப்பாக பந்துவீசி அதே சமயம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 69 ரன்கள் அடித்த இந்திய அணியை வெற்றி பெறவும் செய்தார். அதேபோல ராகுல் சஹர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளையும், சக்காரியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அசத்தி வருகின்றனர்.
நிறைய வீரர்கள் இப்படி அடுத்தடுத்து தங்களுடைய திறமைகளை நிரூபித்து வரும் நிலையில் சூர்யகுமார் யாதவ் இவர்கள் அனைவரிலும் இருந்து மாறுபட்டு தெரிவதாக ஆசிஸ் நெஹரா தற்பொழுது கூறியுள்ளார்.
இந்திய அணியில் இனி அவருக்கான இருந்து கொண்டே இருக்கும்
விராட் கோலி ரோகித் சர்மா ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா எப்படி இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்தி விளையாடி வருகிறார்களோ அதேபோல தற்போது சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார்.சூர்யகுமார் யாதவ் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் 124 ரன்கள் குவித்துள்ளார். இந்த தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ் 62 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 122.77 ஆகும். அதைத் தொடர்ந்து தற்பொழுது நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் 34 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

மிடில் ஆடர் வரிசையில் உள்ளூர் ஆட்டங்களில் அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியில் எப்படி அவர் விளையாடினாலும் அதைவிட மிக சிறப்பாக தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். அவருடைய ஆட்டம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஆட்டத்திற்கு சளைத்தது அல்ல என்பதுபோல் அவர் விளையாடி வருகிறார். இனி இந்திய அணி விளையாடும் அனைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எப்போதும் அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். மிடில் ஆர்டர் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்று விளையாடினாலும் இவருக்கான இடம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என ஆசிஸ் நெஹரா தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.