மிக முக்கிய தலையே இல்லை... இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு !! 1
மிக முக்கிய தலையே இல்லை… இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முதல் முறையாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடர் ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இப்ராஹிம் ஜார்டன் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியில் ஹசரத்துல்லாஹ் ஜாஜாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லாஹ் ஜார்டன், நூர்  அஹமத், முஜிபுர் ரஹ்மான் போன்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மிக முக்கிய தலையே இல்லை... இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு !! 2

ஆஃப்கானிஸ்தான் அணியின் மிக முக்கிய வீரரான ரசீத் கான் இந்திய தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தாலும்,  காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவர் இந்திய அணியுடனான டி.20 தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர குல்பதீன் நைப், ஃபசல், ஃபரீத், சராஃபுதீன் அஸ்ரப், இக்ராம் அலிகில் போன்ற வீரர்களும் இந்திய அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியுடனான டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி; 

இப்ராஹிம் ஜார்டன் (கேப்டன்), ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், இக்ரம் அலிகில், ஹசரத்துல்லாஜ் ஜாசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லாஹ் ஜார்டன், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மாவுல்லாஹ் ஒமர்சாய், முஜிபுர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபாரூகி, ஃபரீத் அஹமத், நவீன் உல் ஹக், நூர் அஹமத், முகமது சலீம், குவைஸ் அஹமத், குல்பதீன் நைப், ரசீத் கான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *