விராட் கோலி கொடுத்த கேட்ச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் கோட்டைவிட்டது இல்லை… ஆஸ்திரேலிய அணியை அசால்டாக வீழ்த்தியதற்கு இந்த ஒரு விசயம் தான் காரணம்; ஜடேஜா ஓபன் டாக்
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியுடனான மிரட்டல் வெற்றி குறித்தான தனது கருத்தை இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா உள்பட முதல் மூன்று வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தாலும், விராட் கோலி (85) மற்றும் கே.எல் ராகுலின் (97*) பொறுப்பான பேட்டிங்கின் மூலம் இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜா,ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தியது தான் போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரவீந்திர ஜடேஜா பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றியது தான் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என கருதுகிறேன். ஸ்டீவ் ஸ்மித் போன்ற சிறந்த பேட்ஸ்மேனின் விக்கெட்டை எடுப்பது சாதரண விசயம் கிடையாது, ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்தபிறகு போட்டி மொத்தமாக மாறிவிட்டது. எனவே தான் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது என கூறுகிறேன். ஸ்டீவ் ஸ்மித் விக்கெட் இழந்த போது 110 ரன்களில் இருந்த ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழந்தபின் வெறும் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சரியான திசையில் பந்துவீச வேண்டும் என்பது தான் எனது ஒரே திட்டம். ஸ்டீவ் ஸ்மித்தின் நான் வீசிய குறிப்பிட்ட பந்து சரியான இடத்தில் பட்டு சுழன்றதும் எனக்கு சாதகமாக அமைந்துவிட்டது. போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளத்தை போன்றது என்பதால் என்னை அதற்கு ஏற்றார்போல் தயார்படுத்தி கொண்டேன். நான் இந்த போட்டிக்காக பெரிதாக எதையும் முயற்சித்து பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.