இனி நீங்க தேவை இல்லை தம்பி… முக்கியமான வீரர் நீக்கம்; அடுத்த போட்டிக்கான இந்திய அணி இது தான்
ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை மிக இலகுவாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் `1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி 17ம் தேதி துவங்க உள்ள நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுடன், கே.எல் ராகுலுக்கே மீண்டும் இடம் கிடைக்கும் என தெரிகிறது. கே.எல் ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் இந்திய அணி மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கும் என தெரிகிறது. இதனால் அடுத்த போட்டியிலும் சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.
மிடில் ஆர்டரில் விராட் கோலி, புஜாரா ஆகியோருடன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படும் என தெரிகிறது. ஸ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்பதை ராகுல் டிராவிட்டே உறுதி செய்துள்ளார். போட்டி நடைபெற இருக்கும் டெல்லி ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் சூர்யகுமார் யாதவை விட ஸ்ரேயஸ் ஐயருக்கே இந்திய அணி முன்னுரிமை கொடுக்கும் என தெரிகிறது. இதனால் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு ஸ்ரேயஸ் ஐயருக்கே ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிகிறது.
விக்கெட் கீப்பராக கடந்த போட்டியை போலவே அடுத்த போட்டியிலும் கே.எஸ் பாரத்திற்கே இடம் கிடைக்கும். ஆல் ரவுண்டர்களாக அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையிலும் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கே இடம் கிடைக்கும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எஸ் பாரத், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், முகமது சிராஜ், முகமது ஷமி.