தமிழக வீரர் தங்கராசு நடராஜனுக்கு மூன்றாவது போட்டியில் இடம் கிடைக்க உண்மையான காரணம் இதுதான் !
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மிக சிறப்பாக பந்து வீசினார் நடராஜன். இந்திய அணியில் பல ஆண்டுகாலம் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் தவித்து வந்தது. ஜாகிர்கான், ஜெயதேவ் உனட்கட், கலீல் அஹமது போன்ற வீரர்களுக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதற்காகவே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
ஆனால் அதற்கெல்லாம் விடை கொடுத்தவாறு தங்கராசு நடராஜன் இந்திய அணியில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்திய அணியில் மற்ற இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களும் நடராஜனை போல் எப்போதும் யார்க்கர் வீசியதில்லை. உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய நடராஜன் முதல்தர போட்டிகளில் பெரிதாக ஆடாமல் தனது திறமையை மூலம் நேரடியாக இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

முதன்முதலாக அவருக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசும் பந்துவீச்சாளராக வேதம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் டி20 அணியில் இடம் பெற்றிருந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டது, இதன் காரணமாக உடனடியாக தங்கராசு நடராஜனுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டு 20 அணியில் இணைந்தார். தொடர்ந்து அவரது திறமையை தெரிந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உடனடியாக அவரை ஒரு நாள் போட்டிகளிலும் சேர்த்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் 2 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. அவரது இடத்தில் நவதீப் சைனி ஆடிக்கொண்டு இருந்தார். அவரும் முதல் இரண்டு போட்டிகளில் பெரிதாக தனது ஆட்டத்தை காட்டவில்லை. உடனடியாக இந்திய கேப்டன் விராட் கோலியின் கண் நடராஜனின் பக்கம் திரும்பியது. நடராஜனின் கனவு நினைவானது ஏனெனில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை.

இதனை வைத்துதான் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை தாண்டி தற்போது ஜஸ்பிரித் பும்ரா விற்கு அடுத்ததாக துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசும் இந்தியாவின் ஒரே வீரர் நடராஜன் தான். இதனை எல்லாம் வைத்து தான் அவருக்கு இந்திய அணியில் தற்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை நன்றாக ஆடி விட்டால் மிக நீண்ட காலம் அவரால் விளையாட முடியும். அந்த திறமை அவருக்கு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.