சமாதானம் செய்த ஸ்டீவ் ஸ்மித்.. டிராவில் முடிந்த டெஸ்ட்... தொடர்ந்து 4வது முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா! 1

சமாதானத்திற்கு வந்த இரண்டு கேப்டன்கள், 1 மணிநேரம் முன்னரே 4வது டெஸ்ட் டிராவில் முடிப்பதாக முடிவு செய்யப்பதாக அறிவிக்கப்பட்டது. 2-1 என தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் அடிக்க, அதை பின்தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை 571 ரன்கள் அடித்தது.

91 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிசை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் முடிவில் மூன்று ரன்கள் அடித்து விக்கெட் இழப்பின்றி இருந்தது. இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி முதலில் நைட் வாட்ச்மேன் ஆக உள்ளே வந்த குன்னமென் விக்கெட்டை இழந்தது.

சமாதானம் செய்த ஸ்டீவ் ஸ்மித்.. டிராவில் முடிந்த டெஸ்ட்... தொடர்ந்து 4வது முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா! 2

அதன்பின் நீண்டநேரத்திற்கு பின், அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடி வந்த துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஜானே இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர்.

ஹெட் 90 ரன்கள் அடித்தார். இவரது விக்கெட்டை அபாரமாக போல்டு செய்து எடுத்தார் அக்சர் பட்டேல். அதன் பிறகு உள்ளே வந்த ஸ்டீவ் ஸ்மித் லபுஜானையுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவர்களது விக்கெட்டை வீழ்த்த ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தொடர்ச்சியாக முயற்சி செய்தும் எடுக்க முடியவில்லை.

சமாதானம் செய்த ஸ்டீவ் ஸ்மித்.. டிராவில் முடிந்த டெஸ்ட்... தொடர்ந்து 4வது முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா! 3

ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்திருந்தது. ஐந்தாம் நாள் முடிவடைய இன்னும் 15 ஓவர்கள் மீதமிருக்கும் பொழுது, இரு அணிகளின் கேப்டன்களும் சமாதானம் செய்து கொண்டு போட்டியை டிராவில் முடிக்க முடிவு செய்தனர். அப்போது களத்தில் 63 ரன்கள் உடன் லபுஜானேவும், 10 ரன்கள் உடன் ஸ்டீவ் ஸ்மித்தும் இருந்தனர்.

நான்காவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்ததால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. பார்டர் கவாஸ்கர் டிராபியை தொடர்ச்சியாக நான்காவது முறை இந்திய அணி கைப்பற்றி புதிய வரலாறும் படைத்திருக்கிறது.

சமாதானம் செய்த ஸ்டீவ் ஸ்மித்.. டிராவில் முடிந்த டெஸ்ட்... தொடர்ந்து 4வது முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா! 4

இந்த டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு போட்டிகளில் 25 விக்கெட்களும், ஜடேஜா மற்றும் நேத்தன் லயன் இருவரும் தலா 22 விக்கெட்களும் கைப்பற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *