ஒன்டே எங்களோட கோட்டை.. டெஸ்டில் ஜெயிச்சிட்டீங்க, ஓடிஐல எங்களோட பிளானே தனி - ஆஸ்திரேலியா கோச் ஆவேசமான பேச்சு! 1

ஒருநாள் தொடரில் இந்திய அணியை வீழ்த்த புதிய திட்டத்துடன் வருகிறோம், பேட்டிங் பவுலிங் இரண்டிலும் பலமிக்க அணியை உருவாக்கியுள்ளோம் என்று பேசியுள்ளார் ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட்.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி முடித்திருக்கிறது. இதனை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக கைப்பற்றி வரலாறும் படைத்திருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடர் முடிவுற்றவுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி அடுத்ததாக விளையாட உள்ளது. வருகிற மார்ச் 17ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் துவங்கும் இந்த ஒருநாள் தொடர் 22 ஆம் தேதி வரை அடுத்தடுத்து விசாகப்பட்டினம் மற்றும் சென்னை மைதானங்களில் நடக்க உள்ளது.

ஒன்டே எங்களோட கோட்டை.. டெஸ்டில் ஜெயிச்சிட்டீங்க, ஓடிஐல எங்களோட பிளானே தனி - ஆஸ்திரேலியா கோச் ஆவேசமான பேச்சு! 2

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுற்ற பிறகு, மருத்துவமனையில் இருந்த தாயாரை பார்க்க ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். சிகிச்சை பலனின்றி அவரது தாயார் இறந்துவிட்டதால் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே இருக்கிறார். ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து, ஒருநாள் தொடரிலும் கேப்டனாக நீடிக்கிறார்.

காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டின் பாதியிலேயே ஆஸ்திரேலியாவிற்கு சென்ற டேவிட் வார்னர், மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு திரும்பியிருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவார் என்ற தகவல்களும் வந்திருக்கிறது. மேலும் பாட் கம்மின்ஸ்-க்கு மாற்று வீரராக யார் வருவார்? என்று இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.

ஒன்டே எங்களோட கோட்டை.. டெஸ்டில் ஜெயிச்சிட்டீங்க, ஓடிஐல எங்களோட பிளானே தனி - ஆஸ்திரேலியா கோச் ஆவேசமான பேச்சு! 3

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் வருகிற ஒருநாள் தொடருக்கு எவ்வாறு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது? ஆஸ்திரேலியா அணியின் திட்டங்கள் என்னவாக இருக்கிறது? என்று சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு அணியின் மத்தியில் பல்வேறு உரையாடல்கள் நிகழ்ந்தது. 50 ஓவர் உலகக்கோப்பையை கவனத்தில் கொண்டு இந்த ஒருநாள் தொடரை அணுகலாம். அதற்கேற்றவாறு அணியை தயார் செய்யலாம் என்று திட்டமிட்டோம். அத்துடன் பேட்டிங்கை சற்று ஆழமாக எடுத்துச் செல்லலாம் என்றும் முடிவு செய்தோம்.

ஒன்டே எங்களோட கோட்டை.. டெஸ்டில் ஜெயிச்சிட்டீங்க, ஓடிஐல எங்களோட பிளானே தனி - ஆஸ்திரேலியா கோச் ஆவேசமான பேச்சு! 4

இதனடிப்படையில் நிறைய ஆல்ரவுண்டர்களை பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டு, 8 வீரர்கள் வரை பேட்டிங் செய்யும் அளவிற்கு அணியை தயார் செய்திருக்கிறோம். முடிவு எத்தகையதாக இருக்கும் என்று தற்போது என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் பல்வேறு குழப்பங்களுக்கு இது பதில் கூறும் என்று நினைக்கிறேன். இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அணியில் இருக்கும் வீரர்கள் செய்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.” என பேசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *