2 டெஸ்ட் வின் பண்ணிட்டோம்னு மெத்தனம்.. வெளிய பிராக்டீஸ் பண்ணிட்டு வரணும், நம்மாளுங்க இந்த வந்துதானே பிராக்டீஸ் பண்ணுனாங்க.. அப்புறம் எப்படி ஜெயிக்கமுடியும் - 3வது டெஸ்ட் தோல்விக்கு ஹர்பஜன் சிங் சாடல்! 1

3வது டெஸ்டில் இந்திய அணி இத்தகைய தோல்வியை சந்திக்க காரணம், இவர்கள் தான் என கடுமையாக சாடியுள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்தூரில் மார்ச் 1ம் தேதி துவங்கி 3வது நாளியே முடிந்த 3ம் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட்டிங் பவுலிங் இரண்டிலும் எதிர்பார்த்த அளவிற்க்கு செயல்படவில்லை. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்ச ஸ்கோராக விராட் கோலி அடித்த 22 ரன்கள் இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

2 டெஸ்ட் வின் பண்ணிட்டோம்னு மெத்தனம்.. வெளிய பிராக்டீஸ் பண்ணிட்டு வரணும், நம்மாளுங்க இந்த வந்துதானே பிராக்டீஸ் பண்ணுனாங்க.. அப்புறம் எப்படி ஜெயிக்கமுடியும் - 3வது டெஸ்ட் தோல்விக்கு ஹர்பஜன் சிங் சாடல்! 2

இந்த இன்னிங்சில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக புஜாரா59 ரன்கள் அடித்திருந்தார். வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் 30 ரன்கள் கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலிங் பொறுத்தவரை, முதல் இன்னிங்சில் இந்திய பவுலர்கள் ஆரம்பத்தில் நோ-பால் வீசியது மற்றும் ரிவியூக்களை தவறான நேரங்களில்  எடுப்பது என சில தவறுகளை செய்திருந்தார்கள். இதனால் ஒரு கட்டத்தில் ஆஸி., அணி 250 ரன்களை கடந்துவிடும் என எதிர்பார்த்தபோது, பின்னர் கடைசி 11 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்து, 197 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.

2 டெஸ்ட் வின் பண்ணிட்டோம்னு மெத்தனம்.. வெளிய பிராக்டீஸ் பண்ணிட்டு வரணும், நம்மாளுங்க இந்த வந்துதானே பிராக்டீஸ் பண்ணுனாங்க.. அப்புறம் எப்படி ஜெயிக்கமுடியும் - 3வது டெஸ்ட் தோல்விக்கு ஹர்பஜன் சிங் சாடல்! 3

88 ரன்களை பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் செய்த அதே தவறை மீண்டும் செய்தனர். பிட்சில் மிகப்பெரிய டர்ன் ஆகிறது என்று தெரிந்தும் சுதாரித்து விளையாடி பார்ட்னர்ஷிப் அமைக்கலாம் என முனைப்பு காட்டாமல் அடுத்தது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டும் ஆகினார்.

இறுதியில் வெறும் 75 ரன்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலை பெற்றது. 3ம் நாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து இந்த இலக்கை ஆஸி., அணி கடந்து,9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

இந்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் மெத்தனப்போக்கை கடைபிடித்தார்கள், பவுலர்கள் அட்டாக் செய்யாமல் பதட்டத்துடன் பவுலிங் செய்தார்கள் என பேசியுள்ளார் ஹர்பஜன் சிங். அவர் கூறியதாவது:

2 டெஸ்ட் வின் பண்ணிட்டோம்னு மெத்தனம்.. வெளிய பிராக்டீஸ் பண்ணிட்டு வரணும், நம்மாளுங்க இந்த வந்துதானே பிராக்டீஸ் பண்ணுனாங்க.. அப்புறம் எப்படி ஜெயிக்கமுடியும் - 3வது டெஸ்ட் தோல்விக்கு ஹர்பஜன் சிங் சாடல்! 4

“ஒரு பேட்ஸ்மேனாக பார்க்கையில், இந்தூர் போன்ற டர்ன் பிட்சில், எவ்வளவு சிறப்பாக தடுத்து விளையாடினாலும், தொடர்ந்து 6 பந்துகளை எதிர்கொள்வது கடினம். லாரா, சச்சின், விராட் கோலி யாராக இருந்தாலும் பிரபலம் இல்லாத பவுலர்கூட இந்த பிட்ச்சில் விக்கெட் எடுக்க முடியும்.”

“இப்படிபட்ட ஒரு பிட்சிற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக ப்ராக்டீஸ் செய்யவில்லை. உள்ள வந்த பிறகு, பெரிய அளவில் டர்ன் ஆகிறது என்று தெரிந்தும், அதற்காக ஆடவில்லை. சிலர் உள்ளே வந்தபின் ப்ராக்டீஸ் செய்கிறார்கள். இந்திய பவுலர்களும் கூடுதலாக கவனித்து பவுலிங் செய்திருக்க வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்கள் மெத்தனப்போக்கை கடைபிடித்ததும் தோல்வியை பெற்றுதந்துள்ளது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *