தம்பி விராட் கோலி... இதே மாதிரி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்லயும் மிட்ச்சல் ஸ்டார்க் பால் வருமே.. அதுக்குள்ள கத்துக்குற வழிய பாருப்பா! - பாகிஸ்தான் முன்னாள் வீரர் எச்சரிக்கை! 1

மிட்ச்சல் ஸ்டார்க்கிடம் விராட் கோலிக்கு பிரச்சனை இருப்பது தெரிகிறது. அதை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் சரி செய்துகொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆரம்பத்தில் தட்டுதடுமாறினாலும் பின்னர் ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தம்பி விராட் கோலி... இதே மாதிரி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்லயும் மிட்ச்சல் ஸ்டார்க் பால் வருமே.. அதுக்குள்ள கத்துக்குற வழிய பாருப்பா! - பாகிஸ்தான் முன்னாள் வீரர் எச்சரிக்கை! 2

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இதற்கு முன்னர் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் திணறியுள்ளனர். அதேபோன்று முதல் ஒருநாள் போட்டியிலும் மிட்ச்சல் ஸ்டார்க்-இடம் சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே ஓவரில் ஒரே மாதிரியாக விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி மிகப்பெரிய பின்னடைவை துவக்கத்தில் சந்தித்து, 39 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பிறகு நல்ல பாட்னர்ஷிப் ஆங்காங்கே கிடைத்ததால் இந்திய அணியால் வெற்றி பெற முடிந்தது இல்லையெனில் தோல்வியில் கூட முடிந்திருக்கலாம்.

தம்பி விராட் கோலி... இதே மாதிரி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்லயும் மிட்ச்சல் ஸ்டார்க் பால் வருமே.. அதுக்குள்ள கத்துக்குற வழிய பாருப்பா! - பாகிஸ்தான் முன்னாள் வீரர் எச்சரிக்கை! 3

இந்த ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஜூன் 7-ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த பைனல் இங்கிலாந்தில் நடக்கிறது. அங்கு வேகப்பந்துவீச்சு நன்றாக எடுபடும். அப்போது மிட்ச்சல் ஸ்டார்க்கை மீண்டும் விராட் கோலி எதிர்கொள்ள நேரிடும். அங்கே பிரச்சினையை ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா. அவர் கூறியதாவது:

“விராட் கோலிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் பிரச்சனை இருப்பது தெளிவாகத் தெரிகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மிட்ச்சல் ஸ்டார்க்கை எதிர்கொள்ள வேண்டியது வரும். அதற்குள் விராட் கோலி நன்றாக பயிற்சி செய்துகொள்ள வேண்டும். இந்திய அணி நிர்வாகம் அவருக்கு நிறைய பயிற்சிகளை டி. நடராஜன் போன்ற இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து கொடுக்க வேண்டும்.” என்றார்.

தம்பி விராட் கோலி... இதே மாதிரி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்லயும் மிட்ச்சல் ஸ்டார்க் பால் வருமே.. அதுக்குள்ள கத்துக்குற வழிய பாருப்பா! - பாகிஸ்தான் முன்னாள் வீரர் எச்சரிக்கை! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *