விராட் கோலி அவுட் சரிதான்; அவுட்டான விரக்தியில புலம்பிட்டு இருக்காரு.. அம்பயருக்கு வாழ்த்துக்கள் - திமிராக பேசிய நேதன் லயன்! 1

விராட் கோலிக்கு அவுட் என்று கொடுத்தது மிகச் சரியான முடிவு. துணிச்சலான முடிவு எடுத்த நடுவருக்கு பாராட்டுகள் என்று பேசியுள்ளார் சுழல் பந்துவீச்சாளர் நேதன் லயன்.

டெல்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் அடித்தது.

விராட் கோலி அவுட் சரிதான்; அவுட்டான விரக்தியில புலம்பிட்டு இருக்காரு.. அம்பயருக்கு வாழ்த்துக்கள் - திமிராக பேசிய நேதன் லயன்! 2

அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருந்தது. 139 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது. அப்போது அஸ்வின் மற்றும் அக்சர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டு 262 ரன்கள் வரை எடுத்துச்செல்ல உதவினர். ஒரு ரன்கள் பின்தங்கிய நிலையில் 262 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது.

விராட் கோலி 44 ரன்கள் அடித்திருந்தார். அவர் ஆட்டம் இழந்த விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எல்பிடபிள்யு முறையில் அவுட் என்று கொடுக்கப்பட்ட மறுகணமே மூன்றாம் நடுவரிடம் முறையிட்ட விராட் கோலிக்கு அதுவும் அவுட் என்று வந்தது. இந்த முடிவு 100 சதவீதம் உறுதியானதாக இல்லை. களத்தில் இருந்த நடுவருக்கு சாதகமாக மூன்றாம் நடுவர் கொடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது.

விராட் கோலி அவுட் சரிதான்; அவுட்டான விரக்தியில புலம்பிட்டு இருக்காரு.. அம்பயருக்கு வாழ்த்துக்கள் - திமிராக பேசிய நேதன் லயன்! 3

ஏனெனில் பந்து முதலில் பேட்டில் பட்டது. பின்னர் தான் காலையில் இருந்த பெடில் பட்டது. சிலர் இதை தலைகீழாகவும் கூறி வருகின்றனர். 100 சதவீதம் உறுதி இல்லாமல் தான் அவுட் என்று கொடுத்தார். உறுதியாக தெரியாதபோது முடிவுகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக கொடுக்க வேண்டும் ஆனால் மூன்றாம் நடுவர் ஏன் அப்படி செய்யவில்லை என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா வீரர் நேத்தன் லயன் இதற்கு கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

விராட் கோலி அவுட் சரிதான்; அவுட்டான விரக்தியில புலம்பிட்டு இருக்காரு.. அம்பயருக்கு வாழ்த்துக்கள் - திமிராக பேசிய நேதன் லயன்! 4

“இது நிச்சயம் அவுட் தான். துணிச்சலான முடிவை எடுத்து அவுட் என்று கொடுத்த மூன்றாம் நடுவருக்கு எனது பாராட்டுகள். விராட் கோலி இதை இல்லை என்று கூறுவார் என நன்றாக தெரியும். எங்களுக்கு ரிவியூ இல்லாத போது களத்தில் இருந்த நடுவர் இப்படி ஒரு முடிவை கொடுத்தது மிக நியாயமாகப்பட்டது.” என்றும் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *