இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து பார்ப்போம்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிரட்டல் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.
மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் போட்டியின் ஓவர்களும் தலா 8ஆக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியும் பெற்றது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி 25ம் தேதி நடைபெறுகிறது.
ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டதால் அதே ஆடும் லெவனுடனே இந்திய அணி, மூன்றாவது போட்டியையும் எதிர்கொள்ளும் என தெரிகிறது.
ஹர்சல் பட்டேல் கடந்த இரண்டு போட்டியிலும் அதிகமான ரன்கள் வாரி வழ்ங்கியிருந்தாலும், அவரது இடத்தை சரி செய்ய சரியான பந்துவீச்சாளர் தற்போதய இந்திய அணியில் இல்லாததாலும், அவருக்கான போதிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் ஹர்சல் பட்டேலிற்கு மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
பேட்ஸ்மேன்களாக கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரே இடம்பெறுவார்கள். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவும், அக்ஷர் பட்டேலும் இடம்பெறுவார்கள்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் யுஸ்வேந்திர சாஹல், பும்ராஹ், ஹர்சல் பட்டேல் ஆகியோரே இடம்பெறுவார்கள் என தெரிகிறது. ஒருவேளை கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் தேவை என இந்திய அணி நினைக்கும் பட்சத்தில் ரிஷப் பண்ட் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.
மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்/ புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், ஹர்சல் பட்டேல், பும்ராஹ்.