இப்போ தெரியுதா.. ஆஸ்திரேலியா அணி யாருன்னு.. இந்த வெற்றி எங்களுக்கு அடுத்த போட்டியிலும் வெல்ல முடியும் என நம்பிக்கை கொடுத்திருக்கிறது - ஆஸி., அணி பயிற்சியாளர் ஆவேசம்! 1

இந்தூர் மைதானத்தில் கிடைத்த வெற்றி மிகப்பெரிய வெற்றி, இது நான்காவது டெஸ்டிலும் ஆஸ்திரேலியா அணிக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது என ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பேசியுள்ளார்.

இந்தியாவில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.

இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இப்போ தெரியுதா.. ஆஸ்திரேலியா அணி யாருன்னு.. இந்த வெற்றி எங்களுக்கு அடுத்த போட்டியிலும் வெல்ல முடியும் என நம்பிக்கை கொடுத்திருக்கிறது - ஆஸி., அணி பயிற்சியாளர் ஆவேசம்! 2

தற்போது இந்த தொடர் 2-1 என்ற கணத்தில் இந்திய அணியின் பக்கம் இருக்கிறது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் வருகிற மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

4வது டெஸ்டில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையிலும் இருக்கிறது. வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறமுடியும்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியா அணி இந்தூர் மைதானத்தில் பெற்ற வெற்றி குறித்தும் கடைசி டெஸ்ட் போட்டியில் அது எப்படி எதிரொலிக்கும் என்பது பற்றியும் பேட்டியளித்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட். அவர் பேசியதாவது:

இப்போ தெரியுதா.. ஆஸ்திரேலியா அணி யாருன்னு.. இந்த வெற்றி எங்களுக்கு அடுத்த போட்டியிலும் வெல்ல முடியும் என நம்பிக்கை கொடுத்திருக்கிறது - ஆஸி., அணி பயிற்சியாளர் ஆவேசம்! 3

“அகமதாபாத் மைதானத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இது முற்றிலும் நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை. ஆனால் மூன்றாவது டெஸ்டில் பெற்ற வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணியாலும் இந்த தொடரில் வெற்றியை பெற முடியும் அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியும் என்று உணர வைத்திருக்கிறோம்.”

“பலரும் 4-0 என்ற கணக்கில் தொடரை இழப்போம் என விமர்சித்தார்கள். ஆகையால் எங்களுக்கு 3வது டெஸ்டில் கிடைத்த வெற்றியை மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் செய்த தவறுகளுக்கு நிறைய ஒர்க்-அவுட் செய்தோம். அதன் எதிரொலியாக கிடைத்த வெற்றியாகவும் இதை கருதுகிறேன்.”

இப்போ தெரியுதா.. ஆஸ்திரேலியா அணி யாருன்னு.. இந்த வெற்றி எங்களுக்கு அடுத்த போட்டியிலும் வெல்ல முடியும் என நம்பிக்கை கொடுத்திருக்கிறது - ஆஸி., அணி பயிற்சியாளர் ஆவேசம்! 4

 

கட்டாயம் இந்திய அணிக்கு நிறைய அழுத்தங்களை கொடுத்தோம். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. கிட்டத்தட்ட அனைத்து டிப்பார்ட்மெண்டிலும் 100 சதவீதம் செயல்பட வேண்டும். இரண்டு மூன்று வாரங்களாக ஆஸ்திரேலியா அணியினர் செய்த கடுமையான பயிற்சி உதவி இருக்கிறது என்றே நினைக்கிறேன். நான்காவது டெஸ்டிலும் வெற்றிபெற எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுப்போம்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *