ரோகித் செஞ்சுரி அடிச்சு ஆரம்பிக்க, விராட் கோலி செஞ்சுரி அடிச்ச முடிச்ச சீரிஸ்னா சும்மாவா... ஆஸ்திரேலியா ஒன்னும் சும்மா தூக்கி கொடுக்கல, போராடி ஜெயிச்சோம் - டிராவிட் பேச்சு! 1

இந்திய அணியின் இந்த வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள். தொடரை வெற்றியில் முடித்து பெருமிதமாக இருக்கிறது என்று பேட்டியளித்தார் கோச் ராகுல் டிராவிட்.

அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி., அணிக்கு உஸ்மான் கவஜா(180) மற்றும் கேமரூன் கிரீன்(114) இருவரும் அபாரமாக சதம் விளாசினர். இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் அடித்தது.

அதை பின்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி(186), ஷுப்மன் கில்(128) இருவரும் சதமடிக்க, முதல் இன்னிங்சில்  571 ரன்கள் அடித்து 91 ரன்கள் முன்னிலை வைத்தது. விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 1200+ நாட்களுக்குப் பிறகு சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் செஞ்சுரி அடிச்சு ஆரம்பிக்க, விராட் கோலி செஞ்சுரி அடிச்ச முடிச்ச சீரிஸ்னா சும்மாவா... ஆஸ்திரேலியா ஒன்னும் சும்மா தூக்கி கொடுக்கல, போராடி ஜெயிச்சோம் - டிராவிட் பேச்சு! 2

அதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸி., அணி 4ம் நாள் முடிவில் 3/0 என இருந்தது. இன்று 5ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸி., முதல் விக்கெட்டை 14 ரன்களுக்கும் 2வது விக்கெட்டை 153 ரன்களுக்கும் இழந்தது. தேநீர் இடைவெளிக்குப்பின்னும் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே ஆஸ்திரேலிய அணி இழந்திருந்தது.

நாள் முடிவடைய 15 ஓவர்கள் மீதமிருந்தபோது ஆட்டம் முடித்துக்கொள்ளலாம் என இரு அணி கேப்டன்களும் முடிவுக்கு வந்ததால், ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

ரோகித் செஞ்சுரி அடிச்சு ஆரம்பிக்க, விராட் கோலி செஞ்சுரி அடிச்ச முடிச்ச சீரிஸ்னா சும்மாவா... ஆஸ்திரேலியா ஒன்னும் சும்மா தூக்கி கொடுக்கல, போராடி ஜெயிச்சோம் - டிராவிட் பேச்சு! 3

இந்திய அணி தொடரை கைப்பற்றியபின் பேட்டியளித்த பிறகு ராகுல் டிராவிட் பேசுகையில், “இந்த தொடர் கடும் போராட்டமாக அமைந்தது. நிறைய சூழல்களில் ஆஸி அணியினர் அழுத்தத்தை கொடுத்தனர். அவற்றை சமாளித்து தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.”

“இந்த சீரியஸை செஞ்சுரியுடன் ஆரம்பித்தார் ரோகித், செஞ்சுரியுடன் முடித்தார் விராட். நடுவில் ஜடேஜா, அஸ்வின்,அக்சர், கில் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் உழைப்பிற்கு பலன்கிடைத்தது பெருமிதமாக இருக்கிறது.”

ரோகித் செஞ்சுரி அடிச்சு ஆரம்பிக்க, விராட் கோலி செஞ்சுரி அடிச்ச முடிச்ச சீரிஸ்னா சும்மாவா... ஆஸ்திரேலியா ஒன்னும் சும்மா தூக்கி கொடுக்கல, போராடி ஜெயிச்சோம் - டிராவிட் பேச்சு! 4

“அடுத்ததாக ஒருநாள் தொடர் வரவுள்ளது. இதைவிட அது இன்னும் முக்கியமானது. ஆஸி அணியின் இன்னும் கடினமானவர்களாக ஒருநாள் தொடர்களில் இருப்பார்கள். சவால் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.” என்கிறார் டிராவிட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *