இந்திய அணியில் தனக்கான வாய்ப்பு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என ராகுல் த்ரிபாட்டி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக வலம் வரும் இந்திய அணியின் இளம்அதிரடி வீரர் ராகுல் திரிபாதி இந்திய அணியில் தேர்வாக வேண்டும் என்பதற்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருக்கிறார்.
ஜிம்பாவே மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடர்களில் இந்திய அணியில் விளையாட தேர்வானாலும் ஓரிரு போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்குப் பின் நடைபெற்ற எந்த ஒரு தொடரிலும் இவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான உள்ளூர் தொடரில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராகுல் திரிபாதியின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது,ஆனால் எதிர்பார்த்த அனைவருக்குமே ஏமாற்றமே மிச்சமானது.
இந்த நிலையில் இந்திய அணியில் தேர்வாகாமல் இருக்கும் மனநிலை குறித்து செய்தியாளர் ஒருவர் ராகுல் திரிபாதியிடம் கேள்வியாக எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த ராகுல் திரி,“ நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியாக தான் உள்ளேன். இந்திய அணியில் சில வீரர்கள் நிலையாக விளையாடி வருகிறார்கள். எனக்கு நிச்சயம் கூடிய விரைவில் வாய்ப்பு கிடைக்கும், என்னுடைய ஒரே வேலை எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது மட்டுமே, நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வாவேன், என்னுடைய ஒரே கனவு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான், நிச்சயமாக அது கூடிய விரைவில் நடக்கும் ”என்று ராகுல் திரிபாதி தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் ராகுல் திரிப்பாதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.