சூரியகுமார் சரிப்பட்டு வரமாட்டாருன்னு சொல்லிட்டீங்க... ரெண்டு மேட்ச்ல ஒரே மாதிரி அவுட்டான சுப்மன் கில் பத்தி ஏன் யாருமே பேசல - முன்னாள் வீரர் சரமாரி கேள்வி! 1

சூரியகுமார் யாதவ், சுப்மன் கில் இருவரும் இரண்டு போட்டிகளில் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்தனர். இதற்கு முன்னர் இப்படி நடந்ததாக நான் பார்த்ததில்லை என்று விமர்சித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என தொடர் சமனில் உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிச்சல் ஸ்டார்க் பந்துவீச்சில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். முதல் போட்டியில் 39 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது போட்டியில் 49 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருக்கிறது.

சூரியகுமார் சரிப்பட்டு வரமாட்டாருன்னு சொல்லிட்டீங்க... ரெண்டு மேட்ச்ல ஒரே மாதிரி அவுட்டான சுப்மன் கில் பத்தி ஏன் யாருமே பேசல - முன்னாள் வீரர் சரமாரி கேள்வி! 2

இதில் குறிப்பிடத்தக்கவிதமாக, 2 போட்டிகளிலும் சுப்மன் கில் ஒரே மாதிரியாக பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இரண்டு முறையும் மிட்ச்சல் ஸ்டார்க்கிடம் அவுட்டானர். அதேபோல் இரண்டு போட்டியிலும் களமிறங்கிய முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ மூலம் சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இரண்டு போட்டியிலும் அதே மிட்ச்சல் ஸ்டார்க் பந்தில் அவுட்டானதால் கடுமையாக விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

சூரியகுமார் சரிப்பட்டு வரமாட்டாருன்னு சொல்லிட்டீங்க... ரெண்டு மேட்ச்ல ஒரே மாதிரி அவுட்டான சுப்மன் கில் பத்தி ஏன் யாருமே பேசல - முன்னாள் வீரர் சரமாரி கேள்வி! 3

 

இருவரின் தவறையும் குறிப்பிட்டு இதற்கு முன்னர் இப்படி மோசமாக நடந்ததே இல்லை என கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

“சுப்மன் கில் இரண்டு போட்டிகளிலும் ஒரே மாதிரியாக பாய்ண்ட் திசையில் ஆட்டம் இழந்தார். சூரியகுமார் உள்ளே வந்ததும் போனதும் தெரியாத அளவிற்கு ஒரே மாதிரியாக அவுட் ஆகினார். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதுபோன்று இரண்டு போட்டிகளிலும் இரண்டு வீரர்கள் ஒரே மாதிரியாக இதற்கு முன்னர் ஆட்டம் இழந்திஇருக்கிறார்களா? என்று. அதிலும் ஒரே பந்து வீச்சாளரிடம் அவுட் ஆனார்களா? என்றும்.

சூரியகுமார் சரிப்பட்டு வரமாட்டாருன்னு சொல்லிட்டீங்க... ரெண்டு மேட்ச்ல ஒரே மாதிரி அவுட்டான சுப்மன் கில் பத்தி ஏன் யாருமே பேசல - முன்னாள் வீரர் சரமாரி கேள்வி! 4

சூரியகுமார் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தன. ஆனால் சுப்மன் கில் ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்ததை ஏன் யாரும் பேசவில்லை?. நிச்சயம் அவரும் சரி செய்துகொள்ள வேண்டும். போட்டிக்குப் பிறகு விரக்தியடைந்து எந்த ஒரு பயனும் இல்லை. அதை சரி செய்வதற்கு உரிய முறையில் பயிற்சியாளரை அணுகி நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முற்படுங்கள். இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் நீங்கள் பந்துவீச்சாளர் பலவீனத்தை கண்டுபிடிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளக்கூடாது.” என அறிவுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *