இனி கொஞ்சம் கூட வாய்ப்பே இல்ல... உலகக்கோப்பை தொடரில் இந்த பையனுக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்காது; கவுதம் கம்பீர் உறுதி !! 1
இனி கொஞ்சம் கூட வாய்ப்பே இல்ல… உலகக்கோப்பை தொடரில் இந்த பையனுக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்காது; கவுதம் கம்பீர் உறுதி

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற விண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு அயர்லாந்து அணியுடனான டி.20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி, அடுத்ததாக இலங்கை சென்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.

இனி கொஞ்சம் கூட வாய்ப்பே இல்ல... உலகக்கோப்பை தொடரில் இந்த பையனுக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்காது; கவுதம் கம்பீர் உறுதி !! 2

இந்தநிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், ஸ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

இனி கொஞ்சம் கூட வாய்ப்பே இல்ல... உலகக்கோப்பை தொடரில் இந்த பையனுக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்காது; கவுதம் கம்பீர் உறுதி !! 4

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “ஸ்ரேயஸ் ஐயரின் விசயம் வருத்தமளிக்கிறது. காயம் காரணமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த ஸ்ரேயஸ் ஐயர், வெறும் ஒரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு மீண்டும் காயமடைந்துள்ளார். இது குறித்து இந்திய அணியை தேர்வுக்குழுவை கேள்வி எழுப்ப வேண்டும். என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்காது என்றே கருதுகிறேன். வேறு ஒரு வீரர் ஸ்ரேயஸ் ஐயரின் இடத்தை பிடிப்பார் என கருதுகிறேன். ஏனெனில் உலகக்கோப்பை தொடருக்கு முழு உடல்தகுதியுடன் கூடிய வீரர்களே தேவை. ஃபார்ம் இல்லாவிட்டாலும் உடற்தகுதி மிக அவசியம். ஒருவேளை ஸ்ரேயஸ் ஐயருக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்த்ய அணியில் இடம் கிடைத்து, தொடரின் பாதியில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டால் என்ன  செய்வது. இது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கொடுக்காமல் இருப்பதே நல்லது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *