விராட் கோலிலாம் கிடையாது,டி.20 தொடருக்கு இவருதான் சூப்பர் ஸ்டார்; ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சொல்கிறார்..
டி.20 தொடர் என்றாலே இந்த வீரர் தான் நினைவுக்கு வருகிறார், என்று இந்திய வீரரை மார்கஸ் ஸ்டாய்னிஸ் பாராட்டியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை விளையாட ஆரம்பித்து,கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிக சரியாக பயன்படுத்தி, நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டின் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் இடம் பெற்றிருக்கும் சூரியகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டில் 31 டி20 போட்டிகளில் பங்கேற்று 1164 ரன்கள் அடித்துள்ளார். மேலும் சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார்.
நிதானமான பேட்டிங் என்பதற்கே அர்த்தம் தெரியாத சூரியகுமார் யாதவ், தான் சந்தித்த முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி, மைதானத்தின் நாலு திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டு இந்திய அணியின் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
இவருடைய அபாரமான திறமையை அங்கீகரிக்கும் வகையில், ஐசிசி இவருக்கு 2022ஆம் ஆண்டின் டி20 தொடருக்கான சிறந்த வீரர் என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்திருந்தது.இதனால் உலகெங்கும் இருக்கும் முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் வல்லுனர்கள் சூரியகுமார் யாதவிர்க்கு தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் டி.20 தொடரில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழும் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ்.,டி.20 தொடர் என்றாலே தற்போது சூரியகுமார் யாதவ் தான் நினைவுக்கு வருகிறார் என்று வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
சூரியகுமார் யாதவ் குறித்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேசுகையில்.,”டி.20 தொடர் என்றாலே தற்போது சூரியகுமார் யாதவ் தான் நியாபகத்திர்க்கு வருகிறார்.டி.20 தொடரில் தனித்துவமான வீரராக சூரியகுமார் யாதவ் திகழ்கிறார்.டி.20தொடரின் மூலம் ஒருவர் உச்சம் தொற்றார் என்றால் அது சூரியகுமார் யதவாகத்தான் இருக்கும்.இவர் களத்தில் இருப்பதால் ஸ்கோர் அதிகமாகிறது,பந்து வெகுதூரத்திற்கு செல்கிறது,மேலும் தற்போது இவரால் டி.20 தொடரே அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது. மேலும் டி.20 தொடருக்கு இது ஒரு பொன்னான நேரம் என்று சூரியகுமார் யாதவை மார்கஸ் ஸ்டாய்னிஸ் பாராட்டி பேசியிருந்தார்.