ஒரேயொரு மேட்ச் 44 வருட சாதனை கிலோஸ்; உஸ்மான் கவாஜா செய்த தரமான சம்பவம்..
இந்தியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் கவாஜா 44 வருட பழமையான சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டி மற்றும் கடைசி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று, ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
மற்ற பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தாலும் மறுமுனையில் ஆரம்பம் முதலே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர்களான உஸ்மான் கவாஜா(180) மற்றும் கேமரூன் கிரீன்(114) இந்திய அணி பந்துவீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் எடுப்பதற்கு உதவியாக இருந்துள்ளனர்.
இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் உஸ்மான் கவஜா இந்த ஒரே டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் . இந்தியா அணிக்கு எதிராக 422 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் கவஜா மிக சிறப்பாக விளையாடி 180 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணிக்கு எதிராக தனி ஒரு வீரராக அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா வீரர் என்ற வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் டீன் ஜோன்ஸ் மற்றும் மேத்யூ ஹைடன் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோன்று அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய வீரர் என்ற வரிசையில் கிரஹாம் எல்லோப்-ஸின் 44 வருட பழைய ஒரு ரெக்கார்டை உஸ்மான் கவாஜா முறியடித்துள்ளார். 1979 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கிரஹாம் எல்லோப்., 392 பந்துகளை எதிர் கொண்டு 162 ரன்கள் அடித்துள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் ஆக்டிங் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்மித்,2017 ரஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 361 பந்துகளை எதிர்கொண்டு அதிக பந்துகளை எதிர்கொண்டு வீரர் என்ற வரிசையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் சாதனையை உஸ்மான் கவாஜா 422 பந்துகளை எதிர் கொண்டு முறியடித்துள்ளார்.
மேலும் இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் உஸ்மான் கவஜா(528) முதலிடத்தை பிடித்துள்ளார் . இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழும் உஸ்மான் கவஜாவை உலக கிரிக்கெட் வட்டாரம் வெகுவாக பாராட்டி வருகிறது.