இந்தியாவில் திறமையான வீரர்களா இல்லை? பார்மில் இல்லாத கேஎல் ராகுலை இன்னும் பிளேயிங் லெவனில் வைத்து, மற்ற வீரர்களின் திறமையை வீணடிக்கிறீர்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.
இந்திய அணியில் துவக்க வீரர் கேஎல் ராகுலின் ஃபார்ம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. லிமிடெட் ஓவர் போட்டிகளில் மிகவும் சொதப்பலாக விளையாடி வந்தார். ஆனாலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் மிகவும் சொதப்பி வருகிறார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டியில் 20 ரன்களுக்கு அவுட் ஆனார். தற்போது இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஸ்பின்னர்களை நன்றாக விளையாடக்கூடிய இவர் இப்படி சொதப்பி வருவது இந்தியாவிற்கு மிகப்பெரும் பின்னடைவு தந்து வருகிறது.
இந்நிலையில் இவரை எப்படி இன்னும் பிளேயிங் லெவனில் எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத். அவர் தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“கே எல் ராகுலை பிளேயிங் லெவலில் வைத்திருப்பது நியாயமான முறையில் வீரர்களை தேர்வு செய்து வருகிறார்கள் எனும் நம்பிக்கையை சீர்குலைக்கிறது. இவருக்கு இத்தனை வாய்ப்புகள் கொடுப்பது, இந்தியாவில் வேறு திறமையான வீரர்கள் இல்லை என்பது போல காட்டுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் 40க்கு போட்டிகள் விளையாடியுள்ள இவரது சராசரி 30க்கும் மேல் கிடையாது.
திட்டமிட்டு திறமையான வீரர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பது போல தெரிகிறது. ஷிக்கர் தவான் டெஸ்ட் போட்டிகளில் 40 பிளஸ் சராசரி வைத்திருக்கிறார். மயங்க் அகர்வால் இரண்டு இரட்டை சதங்கள் உட்பட 41 பிளஸ் சராசரி வைத்திருக்கிறார். சுப்மன் கில் மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். சர்ப்ராஸ் கான் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் அசாத்தியமாக விளையாடி வருகிறார். இதை வைத்துப் பார்க்கையில் உள்ளூர் போட்டிகளில வெளிப்படுத்தும் திறமைகள் அனைத்தும் புறந்தள்ளப்படுகிறது. இப்படி மோசமான பார்மில் இருந்தும் எதன் அடிப்படையில் இவர் இன்னும் பிளேயிங் லெவனில் இருக்கிறார்.” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
deliberately denying talented guys, in form guys an opportunity to be in the 11.
Shikhar had a test avg of 40+ , Mayank has of 41+ with 2 double hundreds, Shubhman Gill in sublime form, Sarfaraz never ending wait.. Many domestic performances constantly ignored. His inclusion is…— Venkatesh Prasad (@venkateshprasad) February 18, 2023