தீபக்சஹரை அணியில் இணைக்காமல் உமேஷ் யாதவ்வை அணியில் இணைத்ததற்கான காரணத்தை இந்திய அணி நிர்வாகம் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 208 ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சில் மிக மிக மோசமாக செயல்பட்டதால் இந்திய அணி இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது.
இந்த தோல்வியின் காரணமாக இந்திய அணி கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக டி20 தொடரில் சிறப்பாக செயல்படும் தீபக்சஹரை அணியில் இணைக்காமல் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய கடைசி டி20 போட்டியை விளையாடிய உமேஷ் யாதவை அணியில் இணைத்தது எதற்காக என்ற கேள்வி பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
thaஅந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், உமேஷ் யாதவை அணியில் இணைத்ததற்கான காரணத்தை இந்திய அணி நிர்வாகம் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ரிசர்வீரராகவோ அல்லது ஸ்டான்ட்-பை வீரராகவோ இல்லாத உமேஷ் யாதவ் தீபக்சஹருக்கு பதில் விளையாட வைத்தது ஏன்..? என்ற கேள்விக்கு அணி நிர்வாகம் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும், தீபக்சஹர் காயத்திலிருந்து தற்பொழுது தான் குணமாகியுள்ளார், உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் இந்த நேரத்தில் அவரை விளையாட விடாமல் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம், தீபக்சஹரை ரிசர்வ் வீரராக வைத்துள்ளீர்கள், ஆஸ்திரேலியாவில் யாராவது காயம் ஏற்பட்டால் அவருக்கு பதில் தீபக்சஹர் தான் விளையாட வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவரை விளையாட விடாமல் வைத்திருப்பது அவருடைய ரிதமை பாலாக்கிவிடும், இப்படி பல்வேறு கேள்விகளுக்கு இந்திய அணி நிர்வாகம் அடுத்த மீடியா கான்பரன்ஸில் பதில் அளிக்க வேண்டும்” என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.