வீடியோ: வந்தவுடன்.. வங்கதேச துவக்க வீரரின் ஸ்டெம்பை பறக்கவிட்ட உமேஷ் யாதவ்! 1

வங்கதேச அணியின் துவக்க வீரர் இமருல் கயஸின் விக்கெட்டை ஸ்டெம்பை சிறதவிட்டு தூக்கினார் உமேஷ் யாதவ்.

இந்தூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில்,  முதல்நாளில் டாஸ் வென்ற வங்கதேச இந்திய பந்துவீச்சாளர்களை வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வந்தது இறுதியாக முதல் இன்னிங்சில் வங்கதேச 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ரோகித்சர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் முதல்நாள் இறுதி வரை நிலைத்து ஆடி மயங்க் அகர்வால் மற்றும் புஜாரா இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததால், இறுதியாக 86 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து இருந்தது இந்திய அணி.

வீடியோ: வந்தவுடன்.. வங்கதேச துவக்க வீரரின் ஸ்டெம்பை பறக்கவிட்ட உமேஷ் யாதவ்! 2

இரண்டாம் நாளில் புஜாரா மற்றும் ரகானே இருவரும் அரைசதம் கண்டனர். இவர்களுடன் ஜோடி சேர்ந்த ஆடிவந்த துவக்க வீரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்து புதிய சாதனை படைத்தார்.

அகர்வால் ஆட்டமிழந்த பிறகு, தொடர்ந்து ஆடி வந்த ஜடேஜா இரண்டாம் நாள் முடிவில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் 500 முதல் 550 ரன்கள் வரை எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட பிடிக்காமல், போட்டி துவங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக திடீரென கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார். தற்போது வங்கதேசத்தை விட இந்திய அணி 343 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

வீடியோ: வந்தவுடன்.. வங்கதேச துவக்க வீரரின் ஸ்டெம்பை பறக்கவிட்ட உமேஷ் யாதவ்! 3

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு துவக்க வீரர் இமருல் கயஸ் 6 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், கிளீன் போல்டாகி வெளியேறினார். தற்போது வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

வீடியோ:

https://twitter.com/GuriOfficial/status/1195563243843899392

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *