தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் ராக்ஸ்டாராக உருவெடுத்துள்ளார் ; வாஷிங்டன் சுந்தரை வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர்…
இந்திய அணியின் ராக்ஸ்டாராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வளர்ந்துள்ளார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பல சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து அணியுடனான இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதால், இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. தங்களது திறமையை வெளிப்படுத்தி கொள்ள இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாகவே கருதப்பட்டது, ஆனால் டி.20 தொடரில் சூர்யகுமார் யாதவையும், ஒருநாள் தொடரில் சுப்மன் கில் மற்றும் வாசிங்டன் சுந்தரை தவிர மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்த தொடரில் செயல்படவில்லை. இதன் காரணமாக இந்திய அணி ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்தது.
ராக்ஸ்டார் வாசிங்டன் சுந்தர்..
குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர், நீண்ட நாள் இடைவெளிக்கு பின் அணியில் இணைந்தாலும் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.
இதனால் இவரை இந்திய அணி ரெகுலராக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்தியா அணிக்கு கோரிக்கை வைத்த வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிரபல கிரிக்கெட் விமர்சகர்மான ஆகாஷ் சோப்ரா., இந்திய அணி வாஷிங்டன் சுந்தருக்கு நிலையான ஒரு இடத்தை கொடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்ததாவது, “இந்திய அணி வாஷிங்டன் சுந்தருக்காக ஒரு நிலையான இடத்தை கொடுக்க வேண்டும், அவரை சரியாக முறையில் பயன்படுத்தினால் அவர் காயம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம், வாஷிங்டன் சுந்தர் தற்போது தான் மிகப்பெரிய காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார், இவர் தற்பொழுது போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ராக்ஸ்டாராக திகழ்ந்துள்ளார். அவருடைய திறமை மற்றும் கிரிக்கெட் அறிவு என அனைத்தும் ஒரு கிரிக்கெட் சூப்பர் ஸ்டாருக்கு இருப்பது போன்றே உள்ளது. இதை தவிர்த்து இந்திய அணி ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் தேடிக் கொண்டிருக்கிறது, முதலில் ரவீந்திர ஜடேஜா என்ற ஒரு ஆல்ரவுண்டரோடு நிறுத்திக் கொண்ட இந்திய அணி பிற்காலத்தில் அக்சர் பட்டேலையும் அணியில் இணைத்துக் கொண்டது. அதற்குப் பின் மற்றவர்களை நீக்கிவிட்டு அஸ்வினை இந்திய அணி ஆல்ரவுண்டர் பொசிஷனில் வைத்திருந்தது” என குறிப்பிட்டிருந்த ஆகாஷ் சோப்ரா மறைமுகமாக இந்திய அணி மற்ற ஆல்ரவுண்டர்களை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தருக்கு அதிக் வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.