பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமிக்கு பதில் தரமான பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ !! 1
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமிக்கு பதில் தரமான பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ..

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமிக்கு மாற்று வீரராக நவ்திப் சைனியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமிக்கு பதில் தரமான பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ !! 2
India’s cricket team captain Virat Kohli, center, celebrates with teammates after winning the second cricket test match against South Africa in Pune, India, Sunday, Oct. 13, 2019. (AP Photo/Rajanish Kakade)

இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற அடிப்படையில் தோல்வியை தழுவியிருக்கும் நிலையில் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால்,பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்டிருக்கும் ஒரே சிக்கல் என்னவென்றால் இந்திய அணியில் எந்தவொரு சீனியர் பந்துவீச்சாளர்களும் இடம்பெறவில்லை என்பதுதான், ஏற்கனவே பும்ரா, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த நிலையில், தற்பொழுது முகமது சமி டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமிக்கு பதில் தரமான பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ !! 3

காயம் காரணமாக விலகிய முகமது சமி..

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான பயிற்சியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் காயத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது சமி இடம்பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முகமத் சமிக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படாமலே இருந்த நிலையில் நேற்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நவ்திப் சைனியை முகமது சமிக்கு மாற்று வீரராக பிசிசிஐ அறிவித்திருந்தது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமிக்கு பதில் தரமான பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ !! 4

30-வயதாகும் வேகப்பந்துவீச்சாளர் நவ்திப் சைனி கடந்த 2021 பிரிஸ்பானில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசியாக பங்கேற்று இருந்தார். அதற்குப்பின் சைனி எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *