பெரிய பவுலர்.. சின்ன பவுலர்ன்னு பாக்காம கதகளி ஆடுறாருய்யா மனுஷன் – இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி!

‘சூரியகுமார் யாதவ் ஒரு பேட்டிங் அதிசயம்’என்று புகழாரம் சுற்றி இருக்கிறார் விராட் கோலி.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பெற்றிருக்கிறது. 6 புள்ளிகளுடன் தனது குரூப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்து விட்டது என்று கூறலாம்.

இந்திய அணிக்கு துவக்க ஜோடி சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அணியின் ஸ்கோரை வெகுவாக மேலே எடுத்துச் செல்கின்றனர்.

சூரியகுமார் யாதவ் நெதர்லாந்துடன் அரைசதம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியுடன் தனி ஆளாக போராடி 68 ரன்கள் என உலக கோப்பையில் தன்னுடைய அபாரமான பேட்டிங்கை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது முக்கியமான கட்டத்தில் உள்ளே வந்து 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்து, ஆட்டத்தின் போக்கை இந்திய அணி பக்கம் திருப்பி ரன் குவிப்பை அதிகரித்துச் சென்றார்.

இந்நிலையில் சக இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி சூர்யகுமார் யாதவின் பேட்டிங் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார்.

“ஸ்கை ஒரு பேட்டிங் அதிசயம். இயல்பான பேட்ஸ்மேன்கள் போன்று இவர் கிடையாது. வெறுமனே வந்து பேட்டை வீசுவது போல இவர் கிடையாது. தெளிவாக என்ன ஷார்ட் விளையாட வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார். அதை 100 சதவீதம் திறம்பட செயல்படுத்துகிறார்.

தனது பேட்டிங் செய்யும் விதத்தை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார். எந்த பந்திற்கு எந்த சாட்டுகள் விளையாடினால் அது பௌண்டரி அல்லது சிக்ஸர்களாக மாறும் என்பதில் கை தேர்ந்தவராகவும் இருக்கிறார். அவரது ஆட்டத்தை பலமுறை பௌலிங் முனையில் நின்று ரசித்திருக்கிறேன். தன்னுடைய டாப் ஃபார்மில் இருக்கிறார். இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகள் இதே போன்ற விளையாடினால் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக இருப்பார்.” என்றார்.

இந்திய அணியின் சூழல் எப்படி இருக்கிறது என்பதை பற்றி கவலையில்லாமல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதுதான் அவரது வெற்றிக்கும் அதிக ரன்கள் குவிப்பதற்கும் காரணமாக இருக்கிறது என நினைக்கிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.