சுப்மன் கில்லா..? ஷிகர் தவானா..? அடுத்த உலகக்கோப்பையில் இவர் தான் துவக்க வீரராக களமிறங்க வேண்டும்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 1
சுப்மன் கில்லா..? ஷிகர் தவானா..? அடுத்த உலகக்கோப்பையில் இவர் தான் துவக்க வீரராக களமிறங்க வேண்டும்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார்

அடுத்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஜோடியாக களமிறங்க ஷிகர் தவான் தான் தகுதியானவர் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2022 டி20 உலக கோப்பை தொடரை கைவிட்டது போல், எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை கைவிட்டு விடக்கூடாது என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்திய அணி, தனது அணியின் வீரர்களை தேர்வு செய்வதிலும் மிக கவனமாக செயல்பட்டு வருகிறது.

 

.சுப்மன் கில்லா..? ஷிகர் தவானா..? அடுத்த உலகக்கோப்பையில் இவர் தான் துவக்க வீரராக களமிறங்க வேண்டும்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 2

மற்ற வீரர்களில் நாம் கிட்டத்தட்ட முடிவாட நிலையில், துவக்க வீரராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் மட்டும் இந்திய அணியில் நீடித்து வருகிறது, இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் ஷிகர் தவான் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் உள்ளதால், இதில் யாரை ரோகித் சர்மாவுடன் துவக்க ஜோடியாக களமிறக்க வேண்டும் என்ற கருத்து இந்திய கிரிக்கெட் வட்டத்தில் நிலவி வருகிறது.

இதில்,கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் கடந்த சில போட்டிகளாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அவர்களை விட்டுவிட்டு சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரில் யாரை ரோகித் சர்மாவோடு துவக்க ஜோடியாக களமிறக்க வேண்டும் என இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

கில், தவான்

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், சுப்மன் கில்லை விட, ஷிகர் தவானுக்கு தான் இந்திய அணியின் துவக்க வீரராக செயல்படுவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் தெரிவித்ததாவது, “இந்திய அணி எப்பொழுதுமே இடது-வலது காம்பினேஷனை மெயின்டைன் செய்து வருகிறது, அந்த அடிப்படையில் பார்த்தால் ஷிகர் தவான் இடது கை பேட்ஸ்மனாகவும் அனுபவசாலியாகவும் திகழ்கிறார். இந்திய அணி எதிர்பார்ப்பதை விட அவரிடம் துவக்க ஜோடியாக திகழ்வதற்கு அதிக காரணங்கள் உள்ளது, மேலும் ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் வைத்திருக்கும் ரெக்கார்ட் உண்மையில் மிக சிறப்பான ஒன்றாகும், இதையெல்லாம் பார்க்கையில் ஷிகர் தவானுக்கு தற்பொழுது கிடைத்திருக்கும் வாய்ப்பு ஒரு சிறந்த வாய்ப்பாகும் இதன் மூலம் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட முடியும்” என சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *