ரொம்ப நன்றி கே.எல் ராகுல்... நீங்க கிளம்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு; கே.எல் ராகுலுக்கு குட் பை சொல்லும் ரசிகர்கள் !! 1
ரொம்ப நன்றி கே.எல் ராகுல்… நீங்க கிளம்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு; கே.எல் ராகுலுக்கு குட் பை சொல்லும் ரசிகர்கள்

வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் கே.எல் ராகுல் சொப்ற ரன்களில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வங்கதேசத்தின் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ரொம்ப நன்றி கே.எல் ராகுல்... நீங்க கிளம்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு; கே.எல் ராகுலுக்கு குட் பை சொல்லும் ரசிகர்கள் !! 2

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, தனது முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மூமினுல் ஹூசைன் 84 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் குவித்துவிட்டு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 93 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 87 ரன்களும் எடுத்தனர்.

ரொம்ப நன்றி கே.எல் ராகுல்... நீங்க கிளம்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு; கே.எல் ராகுலுக்கு குட் பை சொல்லும் ரசிகர்கள் !! 3

 

இதனையடுத்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் 73 ரன்களும், ஜாஹிர் ஹசன் 51 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால், இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் இந்த போட்டியிலும் கே.எல் ராகுல் வெறும் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் 7 ரன்னிலும், அடுத்ததாக களத்திற்கு வந்த புஜாரா 6 ரன்னிலும், விராட் கோலி 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்ததன் மூலம் இந்திய அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்துள்ளது.

ரொம்ப நன்றி கே.எல் ராகுல்... நீங்க கிளம்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு; கே.எல் ராகுலுக்கு குட் பை சொல்லும் ரசிகர்கள் !! 4

இந்தநிலையில், தொடர்ச்சியாக பேட்டிங்கில் சொதப்பி வரும் கே.எல் ராகுல், இந்த போட்டியிலும் மீண்டும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்ச்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.எல் ராகுல் சிறிய ஓய்வு எடுத்துவிட்டு உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் எனவும், கே.எல் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில் போன்றோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதில் சில;

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *