INDvsENG ODI : முதல் போட்டியில் இவர் கண்டிப்பாக விளையாட கூடாது ! - வி.வி.எஸ் லக்ஷ்மன் திட்டவட்டம் 1

இன்று நடைபெறும் முதல் ஒருநாள்  போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் திட்டவட்டமாக கூறி இருக்கிறார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே டி20 மட்டும் டெஸ்ட் தொடர் முடிவடைந்து இருப்பதால் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி இன்று பூனே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணி அளவில் தொடங்குகிறது.

INDvsENG ODI : முதல் போட்டியில் இவர் கண்டிப்பாக விளையாட கூடாது ! - வி.வி.எஸ் லக்ஷ்மன் திட்டவட்டம் 2

இந்நிலையில், இங்கிலாந்து – இந்தியா டி20 தொடரில் அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். சூர்யகுமார் யாதவ் மூன்றாவது டி20 போட்டியில் இடம் பெற்று விளையாடினாலும் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் வருத்தமாக இருந்தது. ஆனால் நாலாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ்பேட்டிங் செய்து 31 பந்தில் அரை சதம்(57) விளாசி கெத்து காட்டினார்.

இதையடுத்து ஐந்தாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 32 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருந்தார். இதன் மூலம் தற்போது இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் அணியிலும் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றிருக்கிறார். ஒருநாள் அணியில் இடம் பெற்றிருந்தாலும் சூர்யகுமார் யாதவ் அணியில்  இடம் பெறுவது சந்தேகம்தான்.

INDvsENG ODI : முதல் போட்டியில் இவர் கண்டிப்பாக விளையாட கூடாது ! - வி.வி.எஸ் லக்ஷ்மன் திட்டவட்டம் 3

ஏனென்றால் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் கூறுகையில் “ சூர்யகுமார் யாதவ் விளையாடும் லெவனில் இடம் பெறுவாரா என்பது தெரியாது. ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மற்ற வீரர்கள் இருப்பதால் சூர்யகுமார் யாதவிற்கு இடம் கிடைப்பது கஷ்டம்.

ஆமாம், சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் தான் இருக்கிறார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிரடி காட்டும் வீரர்களை தான் நான் தேர்வு செய்வேன். ஒன்று அல்லது இரண்டு இன்னிங்சில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இவரைத் தேர்வு செய்து ஸ்ரேயஸ் ஐயரை ஒதுக்க முடியாது” என்று லக்ஷ்மன் கூறியிருக்கிறார்.

INDvsENG ODI : முதல் போட்டியில் இவர் கண்டிப்பாக விளையாட கூடாது ! - வி.வி.எஸ் லக்ஷ்மன் திட்டவட்டம் 4
V. V. S. Laxman. (File Photo: IANS)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *