இந்திய அணியை பொட்டலம் கட்டி.. இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து படை! 1

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 227 வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை அனாயசமாக எதிர்கொண்டு 578 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் அபாரமாக விளையாடி 218 ரன்கள் அடித்திருந்தார்.

இந்திய அணியை பொட்டலம் கட்டி.. இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து படை! 2

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் மிகவும் தடுமாற்றம் கண்டது. 5வது விக்கெட்டுக்கு புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்து இந்திய அணியை மீட்டனர். கீழ் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணி 300 ரன்களை கடந்தது.

முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 241 ரன்கள் பின்தங்கி இருந்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 91 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் அடித்திருந்தனர்.

இந்திய அணியை பொட்டலம் கட்டி.. இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து படை! 3

நல்ல முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழக்கத் துவங்கியது. இறுதியில் 178 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து 419 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் ரோஹித் சர்மா(12) ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த புஜாராவும் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் மீண்டும் இங்கிலாந்து அணியின் கை ஓங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில்(50) அரைசதம் கடந்த பிறகு ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். மீண்டும் இந்திய அணி சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பின்னர் வந்த ரஹானே மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது.

இந்திய அணியை பொட்டலம் கட்டி.. இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து படை! 4

இருப்பினும் களத்தில் கேப்டன் விராட்கோலி இருந்ததால் சிறிதளவு நம்பிக்கையுடன் போட்டி டிரா நிலையை அடையும் என எதிர்பார்க்கப்பட்டபோது, விராட் கோலியும் 72 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியானது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியை 192 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இங்கிலாந்து அணி முதல் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *