ஷிகர் தவான் பேட்டிங்கில் சொதப்புவதற்கு முக்கிய காரணமே இதுதான் ; உண்மையை போட்டுடைத்த முன்னாள் வீரர் !! 1

ஷிகர் தவான் பேட்டிங்கில் தடுமாறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்பதை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

 

ஒரு காலத்தில் இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான், தற்பொழுது இந்திய அணிக்காக ஒருநாள் தொடரில் மட்டுமே பங்கேற்று விளையாடிய வருகிறார்.

ஷிகர் தவான் பேட்டிங்கில் சொதப்புவதற்கு முக்கிய காரணமே இதுதான் ; உண்மையை போட்டுடைத்த முன்னாள் வீரர் !! 2

ஐசிசியால் நடத்தப்படும் பெரிய தொடர்களில் எப்பொழுதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நற்பெயரை பெற்ற ஷிகர் தவான் தற்பொழுது பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதற்கு தடுமாறி வருகிறார்.

 

குறிப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடும் ஷிகர் தவான், முதலில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.(முதல் போட்டியில் 31 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் இரண்டாவது போட்டியில் 9 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.) இதனால் மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

 

இப்படி பேட்டிங்கில் மோசமாக செயல்படும் ஷிகர் தவான் சிறப்பாக செயல்படுவதற்கு முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதேபோன்று ஷிகர் தவான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியாததன் காரணத்தையும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

ஷிகர் தவான் பேட்டிங்கில் சொதப்புவதற்கு முக்கிய காரணமே இதுதான் ; உண்மையை போட்டுடைத்த முன்னாள் வீரர் !! 3

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், ஷிகர் தவான் தடுமாற்றத்துடன் விளையாடுவதற்கு முக்கியமான காரணம் அவர் போதுமான போட்டிகளில் பங்கேற்று விளையாடவில்லை என்பதுதான் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து வாஷிம் ஜாபர் தெரிவித்ததாவது, ஷிகர் தவானின் பேட்டி விரும்பத்தகாத வகையில் அமைந்திருந்தது, முதல் ஒருநாள் போட்டியில் தன்னுடைய விக்கெட்டை இழக்காமல் திகழ்ந்தவன் பேட்டிங் செய்தாலும் அவர் தடுமாற்றத்துடன் விளையாடியது பார்க்க முடிந்தது, அவரால் முன்பு போல் சிறப்பாக செயல்பட முடியவில்லை இதற்கு முக்கிய காரணம் அவர் போதுமான அளவிற்கு விளையாடவில்லை என்பதுதான்” என்று வாஷிம் ஜாபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *