அடடே... மிக மிக மோசமான சாதனையிலும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி !! 1
அடடே… மிக மிக மோசமான சாதனையிலும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் விராட் கோலி மிக மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29வது போட்டியான, இந்தியா – இங்கிலாந்து இடையேயான போட்டி லக்னோ  மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டிகளில் மிக மோசமான தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து அணி, இந்த போட்டியில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டது.

அடடே... மிக மிக மோசமான சாதனையிலும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி !! 2

போட்டியின் ஆரம்பத்திலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள், சுப்மன் கில் (9), விராட் கோலி (0), ஸ்ரேயஸ் ஐயர் (4) ஆகியோரை வந்த வேகத்தில் வெளியேற்றினர்.

நீண்டநேரம் தனி ஆளாக போராடிய கேப்டன் ரோஹித் சர்மா 81 ரன்களும், கே.எல் ராகுல் 39 ரன்களும், கடைசி நேரத்தில் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 49 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 229 ரன்கள் குவித்தது.

இந்தநிலையில், கடந்த போட்டிகளில் அரைசதம், சதம் அடித்து சாதனைகள் படைத்த விராட் கோலி, இந்த போட்டியில் டக் அவுட்டானதன் மூலமும் ஒரு சாதனை படைத்துள்ளார், ஆனால் அது மோசமான சாதனை என்பது தான் வேதனையான விசயம்.

அடடே... மிக மிக மோசமான சாதனையிலும் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி !! 3

இங்கிலாந்து அணியுடனான இந்த போட்டியில் டக் அவுட்டான விராட் கோலி, இதன் மூலம் அதிக முறை டக் அவுட்டான (முதல் 7 வீரர்களில்) இந்திய வீரர்கள் பட்டியல் சச்சின் டெண்டுல்கருடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 34 முறை டக் அவுட்டாகியிருந்ததே இந்த பட்டியலில், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் விராட் கோலியும், முதல் இடத்திற்கு முன்னேறி மோசமான வரலாற்றிலும் இடம்பிடித்துள்ளார்.

அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியல் (பேட்டிங் வரிசையில் முதல் 7 வீரர்கள்)

விராட் கோலி – 34 முறை

சச்சின் டெண்டுல்கர் – 34 முறை

விரேந்திர சேவாக் – 31 முறை

ரோஹித் சர்மா – 30 முறை

சவுரவ் கங்குலி – 29 முறை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *