ஜேம்ஸ் ஆண்டர்சன் - விராட் கோலி இடையேயான மோதலை இனி பார்க்க முடியாது; முன்னாள் வீரர் வேதனை !! 1

விராட் கோலி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையில் நடைபெறும் சம்பவத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டெஸ்ட் போட்டியுடன், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

நடப்பு ஆண்டி பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றி வாகை சூடிய பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை இந்திய அணி எப்படி சமாளிக்க போகிறது என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் உட்பட அனைவரும் ஆவலாக உள்ளனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் - விராட் கோலி இடையேயான மோதலை இனி பார்க்க முடியாது; முன்னாள் வீரர் வேதனை !! 2

ஜேம்ஸ் ஆன்டர்சன் Vs விராட் கோலி

அதேபோன்று ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் விராட் கோலி இடையில் நடக்கும் விறுவிறுப்பான போட்டியை பார்ப்பதற்கு அனைவரும் ஆவலாக உள்ளனர்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பத்து இன்னிங்ஸில் விளையாடிய விராட் கோலி வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். குறிப்பாக இவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் 4 முறை தன்னுடைய விக்கெட்டை இழந்தார், மேலும் அந்தத் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 50 பந்துகளில் இவரால் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் - விராட் கோலி இடையேயான மோதலை இனி பார்க்க முடியாது; முன்னாள் வீரர் வேதனை !! 3

அதற்குப் பின் எப்படியாவது ஜேம்ஸ் ஆண்டர்சனை பழிவாங்க வேண்டும் என்று 2018 சுற்றுப்பயணத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்தார். இரண்டு சதம் மூன்று அரை சதம் என அந்த தொடரில் அசத்திய விராட் கோலி தன்னுடைய விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் இழக்கவில்லை.

 

இதனால் விராட் கோலியை பழிதீர்க்க வேண்டும் என்று 2021 சுற்றுப்பயணத்தின்போது விராட் கோலியை தன்னுடைய முதல் பந்திலே விக்கெட் எடுத்து அசத்தினார்.மேலும் 3வது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலியின் விக்கெட்டை ஜேம்ஸ் ஆன்டர்சன் கைபற்றினார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் - விராட் கோலி இடையேயான மோதலை இனி பார்க்க முடியாது; முன்னாள் வீரர் வேதனை !! 4

இப்படி எலியும் பூனையுமாக மாறி மாறி மோதிக்கொள்ளும் ஆண்டர்சன் மற்றும் விராட் கோலி இடையிலான இந்த போட்டியை காண்பதற்கு ஆவலாக உள்ளது என இர்பான் பதான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து இர்பான் பதான் தெரிவித்ததாவது, “இவர்கள் இருவருக்கும் மத்தியில் நடைபெறும் இந்த யுத்தத்தை எவ்வளவு அதிகம் பார்க்கிறோமோ அவ்வளவு அதிகம் ரசிக்கலாம், கடந்த தொடரைப் பொறுத்தவரை ஆண்டவர்சன் அதிகமான போட்டிகளில் பங்கெடுத்து விளையாடவில்லை, மேலும் அவர் இன்னும் சில போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்து விடுவார். அதேபோன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடர் காலதாமதமாக நடைபெற்றுள்ளது, இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, கடந்த தொடரில் ஆண்டர்சன் பந்தை அருமையாக ஸ்விங் செய்தார். அது மிகவும் பிரமாதமாக இருந்தது, இது நிச்சயம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக அமையும், இதனால் விராட் கோலியும் சில சிக்கலை அனுபவிக்கலாம், மேலும் ஆண்டவரசனின் பந்து விராட் கோலிக்கு சவாலாக இருக்கும் ” என்று இர்பான் பதான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *