நடந்து முடிந்த சம்பவத்தை எல்லாம் மறந்து விட்டேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவி அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது, இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது, இதில் இங்கிலாந்து அணி ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழசலாம் மறந்தாச்சு…
இந்த நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அஸ்வின் அதேபோன்று தற்போது ஓரக்கட்டப்படுவார் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது, ஆனால் நடந்து முடிந்த சம்பவத்தைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை என்று அஸ்வின் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து அஸ்வின் பேசுகையில்,“நான் என்னுடைய மன உறுதியை பயிற்றுவித்து உள்ளேன், தனிப்பட்ட முறையில் இதற்காக நிறைய முயற்சிகள் செய்துள்ளேன், என் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் விரைவாகவே மறந்து வருகிறேன், கடந்த வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுள் நடைபெற்றதை நான் மறந்துவிட்டேன். தற்பொழுது நான் செய்யும் ஒரே நல்ல விஷயம் அனைத்தையும் கடந்து முன்னேறுவது தான், மேலும் எதிர்வரும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 3-1 தொடரை வெற்றி பெற செய்து மகிழ்ச்சியடையவேன், நான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்ற போது இருந்தேன் எதிர்பாராத விதமாக எங்களால் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற முடியவில்லை என்று அஸ்வின் பேசியிருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் களம் இறக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டிருந்தது அந்த சமயத்தில் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.