கோலியின் மற்றொரு சாதனையையும் காலி.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்ட உள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 27ம் தேதி துவங்கியது. இந்த தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களின் பொறுப்பான விளையாட்டின் மூலம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோலியின் மற்றொரு சாதனையையும் காலி.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா !! 2

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்ள உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை போன்று ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று, இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றையும் எட்ட உள்ளார்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ரோகித் சர்மா 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ள இந்திய கோப்டன்களில் வீராட் கோலி சாதனையை முறியடிப்பார்.

கோலியின் மற்றொரு சாதனையையும் காலி.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா !! 3

வீராட் கோலி 50 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுள்ளார். 16 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவு இல்லை. 2 போட்டி ‘டை’ ஆனது. ரோகித் சர்மா 36 போட்டியில் 30 வெற்றி பெற்று சமநிலையில் உள்ளார். 6 ஆட்டத்தில் மட்டுமே தோல்வி ஏற்பட்டது.

ஹாங்காங்கை வீழ்த்தினால் ரோகித் சர்மா 31 வெற்றியுடன் 2-வது இடத்துக்கு முன்னேறுவார். கோலி 3-வது இடத்துக்கு பின் தங்குவார். தோனி 72 போட்டியில் 41 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரது தலைமையில் 28 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவில்லை. ஒரு போட்டி ‘டை’ ஆனது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *