ஹர்திக் பாண்டியா கேப்டன்... சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம்; அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

அயர்லாந்து அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு டி.20 தொடருக்கு பிறகு அயர்லாந்து நாட்டிற்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

ஹர்திக் பாண்டியா கேப்டன்... சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம்; அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

இரண்டு போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது. அயர்லாந்து தொடருக்கு பிறகு நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்கள் இங்கிலாந்து செல்வதால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு டி.20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட், ஜுலை 1ம் தேதி துவங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால், அயர்லாந்து அணிக்கு எதிரான டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா கேப்டன்... சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம்; அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் த்ரிபாட்டிக்கு அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. சஞ்சு சாம்சனுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், சாஹல், அக்‌ஷர் பட்டேல், அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக் போன்ற வீரர்களும் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி;

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், அக்‌ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *