தற்போது இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் ஷிகர் தவான் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி நியூஸிலாந்து அணியை 230 ரன்னுக்கு நிறுத்திவிட்டார்கள் என ஷிகர் தவான் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை பாராட்டினார்.
231 ரன் சேஸ் செய்யும் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மாவை தொடக்கத்திலேயே இழந்து அதிர்ச்சி கொடுத்தார்கள், ஆனால் இந்திய அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாட இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற உதவினார்கள்.
“எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி, ரன்னை கட்டுபடுத்தினார்கள். அவர்கள் எங்கள் பந்துவீச்சை நன்றாக விளையாடியதை விட நாங்கள் அவர்களின் பந்துவீச்சை சிறப்பாக விளையாடினோம்,” என ஷிகர் தவான் கூறினார்.
300 ரன் அடிப்பதை விட 230 ரன் அடித்தது ஈசியாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் தான் பாதி வேலையை செய்தார்கள், அவர்களுக்கு உறுதுணையாக பீல்டர்களும் நன்றாக விளையாடினார்கள் என மேலும் தவான் தெரிவித்தார்.
நேற்று மூன்று விக்கெட்டுகள் எடுத்து அற்புதமாக பந்து வீசி ஆட்டநாயகன் விருதை வென்ற புவனேஸ்வர் குமாரையும் இந்திய அணியின் தொடக்கவீரர் ஷிகர் தவான் பாராட்டினார்.
“அவர் மெதுவாக வீசினாலும், வேகமாக பந்து வீசினாலும், கரக்ட்டான இடத்தில் வீசுகிறார். ஆனால், டெத் ஓவர்களில் அவரை விட யாரும் சிறப்பாக பந்து வீச முடியாது, அவர் கடைசி நேரத்தில் சிறப்பாக யார்கர் வீசுகிறார். நான் ஐபில் மற்றும் இந்திய அணியில் அவரை பார்த்திருக்கிறேன், அனைத்து இடத்திலும் சிறப்பாக பந்து வீசுகிறார்,” என தவான் தெரிவித்தார்.
“தினேஷ் கார்த்திக் பற்றி சொல்லணும் என்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாட கடுமையாக பயிற்சி செய்தார். இதனால் தான் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். அவர் நடுவரிசையில் சிறப்பாக விளையாடுகிறார், அந்த ஷாட் மற்றும் அவரது ஆட்டம் அவர் யார் என்று மீண்டும் நிரூபித்தது,” என ஷிகர் தவான் கூறினார்.