ரோஹித் சர்மா
இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அனைத்து விதமான தொடரிலும் பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார் இருந்த போதும் கடந்த மூன்று மாதங்களாக ஓய்வே இல்லாமல் விளையாடி வரும் ரோகித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
34 வயதாகும் ரோகித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறாதது இந்திய அணிக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
