சரியான வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்க… இந்த பையன அடிச்சிக்க ஆளே கிடையாது; கவுதம் கம்பீர் சொல்கிறார்
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து இந்த பேட்ஸ்மேன் தான் சிறப்பாக செயல்படுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரின் கேப்டனாக செயல்பட்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தன்னுடைய 19 வயதிலேயே சர்வதேச இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் அறிமுகமாகிய பிரித்வி ஷா, அதற்குப் பின் நடைபெற்ற ஐபிஎல் தொடர் உள்ளூர் தொடர் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார்.இதனால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போகப் போக இவருக்கு ஏற்பட்ட காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக இவரை இந்திய அணி முற்றிலுமாக ஓரம் கட்டியது.
அப்படியிருந்தும் தன்னுடைய கடுமையான பயிற்சி மூலம் மீண்டும் வந்த ப்ரித்வி ஷா, சையத் முப்தாக் அலி போட்டி, விஜய் ஹசாரே போட்டி, ரஞ்சி கோப்பை ஆகிய அனைத்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய அணி இவரை கண்டுகொள்ளாமலே இருந்தது.
அந்த சமயத்தில் நடந்து முடிந்த ரஞ்சிக்கோப்பையில் அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்து மீண்டும் ஒருமுறை இந்திய கிரிக்கெட் வட்டத்தில் விவாதத்தை கிளப்பிய பிரித்விஷா நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் கிடைத்தது ஆனால் இவரை பிளேயிங் லெவனில் இந்திய அணி விளையாட வைக்கவில்லை.
இதனால் மோசமாக செயல்படும் வீரர்களை எல்லாம் விளையாட வைத்துவிட்டு பிரித்வி ஷா போன்ற ஒரு இளம் அதிரடி வீரரை ஏன் இந்திய அணி நிராகரிக்கிறது என்ற கேள்வி இந்திய கிரிக்கெட் வட்டத்தில் வெகுவாக எழுந்து வருகிறத.
அந்த வகையில் பிரித்திஷா இந்திய அணி இடம் மறுக்கப்படுவது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் எதிர்வரும் 2024 டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக பிரித்விஷா தான் செயல்படுவார் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் தெரிவித்ததாவது, “நான் மீண்டும் ஒருமுறை பிரத்வி-ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறேன், நிச்சயம் பிரித்வி ஷாவிற்கு டி20 தொடரில் அதிகப்படியான வாய்ப்புகள் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், ஏனென்றால் 2023 டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி ரோஹித் சர்மாவை தவிர்த்து இந்திய அணியில் மிகச்சிறந்த வீரராக பிரித்விஷா உருவெடுப்பார் என நினைக்கிறேன், சுப்மன் கில் ஒரு நாள் உலகில் தன்னுடைய முத்திரையை பதித்து விட்டார், அதேபோன்று ப்ரித்விஷா நிச்சயம் டி 20 தொடரில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார்.அவருடைய பேட்டிங் இயற்கையாக உள்ளது என கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். மேலும் எதிர்வரும் டி20 தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என்றும் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.