இந்திய அணி
ஒவ்வொரு ஃபார்மட்டிற்கும் ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் ; இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர் ..

தற்போதைய இந்திய அணி ஒவ்வொரு பார்மதிருக்கும் ஒவ்வொரு கேப்டனை நியமிக்க வேண்டும் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.

 

இருதரப்பு தொடரில் புலியை போல் பாயும் இந்திய அணி, ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பை தொடர் போன்ற முக்கிய போட்டிகளில் வழக்கம் போல் மண்ணைக் கவ்வியது.ஒவ்வொரு ஃபார்மட்டிற்கும் ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் ; இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர் !! 1

பலம் குறைவான அணி.. பேட்டிங்கில் பலவீனமான அணி, பந்துவீச்சில் சுமாரான அணி.. என்று சொன்ன அணிகளெல்லாம் உலகக்கோப்பை தொடரில் போராடியாவது தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மிக மோசமாக இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாவில்லை.

தொடர் துவங்குவதற்கு முன்பு கோப்பை நமக்குத்தான் என்று வாய் சவடால் விட்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியசத்தில் மோசமாக வெளியேறியதால், ரசிகர்கள் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஃபார்மட்டிற்கும் ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் ; இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர் !! 2

சமகால கிரிக்கெட்டின் வலுவான அணியாக இந்திய அணி இருந்தும் ஐசிசி., தொடர்களில் தொடர்ந்து சொதப்புவி வருவதற்கான சரியான காரணமே தெரியாததால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா, இந்திய அணி., டி20 தொடருக்கென தனி ஒரு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நியமிக்க வேண்டும் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஃபார்மட்டிற்கும் ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் ; இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர் !! 3

இதுகுறித்து டேனிஷ் கனரியா தெரிவித்ததாவது, “இந்திய அணி ஒவ்வொரு தொடருக்கென தனி ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும், ஒரே கேப்டனை மூன்று விதமான தொடருக்கும் நியமிப்பதை விட இப்படி நியமிப்பது ஒரு மாற்றத்தை கொடுக்கும், தற்போது இந்திய அணி ஹர்திக் பாண்டியாவை டி20 தொடருக்காண கேப்டன் என அறிவித்துள்ளது, ஆனால் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் இதுபோன்று ஒவ்வொரு தொடருக்கென தனி ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும், கேப்டனை ஒவ்வொரு பார்மட்டிர்க்கும் நியமிப்பது போல், பயிற்சியாளர்களையும் ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் நியமிக்க வேண்டும். என்னுடைய பார்வையில் ராகுல் டிராவிட் டெஸ்ட் போன்ற லாங்கர் பார்மட்டில் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்,டி20 தொடருக்கு தனித்துவமான ஒரு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும்” என்று டேனிஷ் கனரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *