விராட் கோலிய மொத்தமா ஓரங்கட்ட நினைச்சாங்க... ஆனா நடந்ததது வேற; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 1
விராட் கோலிய மொத்தமா ஓரங்கட்ட நினைச்சாங்க… ஆனா நடந்ததது வேற; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு

சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு வீராட் கோலியின் கிரிக்கெட் கரியரையே நாசம் செய்ய பார்த்தது என்று டேனிஷ் கனரியா குற்றம் சாட்டியுள்ளார்

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி-பைனல் வரை சென்று படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனால் ரோகித் சர்மா மீதும் இந்திய தலைமை தேர்வுக்குழு மீதும் பிசிசிஐ கடும் அதிர்ச்சியில் இருந்தது இதை வெளிப்படுத்தும் விதமாக இந்திய அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா மற்றும் இவரது மொத்த குழுவையும் அதிரடியாக நீக்கியிருந்தது.

விராட் கோலிய மொத்தமா ஓரங்கட்ட நினைச்சாங்க... ஆனா நடந்ததது வேற; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 2

சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை நீக்கிய பிறகு சேத்தன் சர்மா குழுவின் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

 

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் விமர்சகருமான டேனிஷ் கனரியா, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு., இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் கிரிக்கெட் கரியரை நாசம் செய்ய பார்த்தது என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

விராட் கோலிய மொத்தமா ஓரங்கட்ட நினைச்சாங்க... ஆனா நடந்ததது வேற; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 3

இதுகுறித்து டேனிஷ் கனரியா தெரிவித்ததாவது, “சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு இந்திய அணியின் கிரிக்கெட் கரியரை நாசம் செய்ய பார்த்தது, விராட் கோலி ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறிய நிலையில் அவருக்கு போதுமான வாய்ப்பை கொடுக்காமல், அவ்வப்போது மட்டுமே விளையாட வைத்தது, மேலும் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை, இதுகுறித்து தேர்வு குழுவிடம் கேட்டால் முன்னுக்குப் பின் முரணான செய்திகளை தெரிவித்தது, ஆனால் விராட் கோலி தெள்ளத்தெளிவாக., கேப்டன் பதவியிலிருந்து தன்னை நீக்கியது குறித்து யாரும் எந்த ஒரு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிவித்துவிட்டார். மேலும் இந்த மோசமான நிகழ்வு தன்னுடைய கிரிக்கெட் கரியரை நாசம் செய்து விடாமலும் விராட் கோலி பார்த்துக் கொண்டார். மேலும் பேசிய டேனிஷ் கனரியா, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு சரியான வீரர்களை தேர்வு செய்யவில்லை, முன்னால் வீரர்களான இவர்கள் சரியான வீரர்களை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.சிறந்த வீரர்களுக்கு அணியில் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும், சேத்தன் சர்மாவின் தேர்வு மிக மோசமாகவே இருந்தது, அவருடைய தேர்வு பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியிருந்தது. மிகக் குறுகிய காலத்தில் பல்வேறு விதமான கேப்டன்களை நியமித்ததால் அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டது” என்று சேத்தன் சர்மாவை டேனிஷ் கனரியா விமர்சித்து பேசியிருந்தார்.

Leave a comment

Your email address will not be published.