கபில் தேவ்
இந்திய அணியின் கேப்டன் விஷயத்தில் தேவையில்லாத குழப்பம் செய்தால் தேர்வுக்குழுவை டிஸ்மிஸ் செய்வோம் ; பிசிசிஐ-யின் தேர்வுக்குழுவை மிரட்டிய கபில் தேவ்..

தேவையில்லாத காரணத்தால் இந்திய அணியின் கேப்டனை மாற்றினால் நாங்கள் தேர்வு குழுவை மாற்றுவோம் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஏற்கனவே இருந்த தேர்வு குழுவாக இருக்கட்டும் அல்லது இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் அணியின் கேப்டனாக ஒருவரை நியமித்து விட்டால் அவருக்கு போதுமான வாய்ப்பு வழங்குவதோடு அவருக்கு உறுதுணையாகவும் இருப்பார்கள்.

இந்திய அணியின் கேப்டன் விஷயத்தில் தேவையில்லாத குழப்பம் செய்தால் தேர்வுக்குழுவை டிஸ்மிஸ் செய்வோம் ; பிசிசிஐ-யின் தேர்வுக்குழுவை மிரட்டிய கபில் தேவ்!! 1

ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு அந்த நடைமுறை மாறிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால் தற்போதைய இந்திய அணியில் அனைத்து தொடர்களையும் வெற்றி பெற்று தரக்கூடிய ஒரு கேப்டன் வேண்டும் என்ற பார்வையில் தேர்வு குழு செயல்படுத்துவங்கிவிட்டது.

இந்திய அணியின் கேப்டன் விஷயத்தில் தேவையில்லாத குழப்பம் செய்தால் தேர்வுக்குழுவை டிஸ்மிஸ் செய்வோம் ; பிசிசிஐ-யின் தேர்வுக்குழுவை மிரட்டிய கபில் தேவ்!! 2

விராட் கோலி உலகக் கோப்பை தொடரை வென்று கொடுக்கவில்லை என்று நீக்கிய தேர்வு குழு., ரோகித் சர்மாவை இந்திய அணியின் மூன்று விதமான தொடருக்கும் கேப்டனாக நியமித்தது. பின்பு ரோஹித் சர்மா 2022 டி20 உலக கோப்பை தொடரை அணி சிறப்பாக வழி நடத்தவில்லை என்று தற்பொழுது டி.20 தொடருக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது.

தேர்வு குழுவின் இந்த செயல் பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை, ஏனென்றால் எந்த ஒரு கேப்டனாக இருந்தாலும் அவருக்கு போதுமான வாய்ப்பை கொடுத்துவிட்டுதான் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் எடுக்க வேண்டும் என்று இந்திய அணியில் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் விஷயத்தில் தேவையில்லாத குழப்பம் செய்தால் தேர்வுக்குழுவை டிஸ்மிஸ் செய்வோம் ; பிசிசிஐ-யின் தேர்வுக்குழுவை மிரட்டிய கபில் தேவ்!! 3

அந்த வகையில் இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ்., தற்பொழுது டி20 தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவிர்க்கு போதுமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் தேர்வு குழுவிர்க்கு எதிராக நாங்கள் செயல்படத் துவங்கிவிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதில்,“ஊர் உலகம் என்ன பேசுகிறது என்பதை பற்றி சிந்திக்காமல், தன்னுடைய அணிக்காக சிந்திக்க வேண்டும், தற்பொழுது ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளீர்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா ஒரு தொடரில் தோல்வி அடைந்தார் என்பதற்காக அவரை நீக்கினால்,நாங்கள் அனைவரும் தேர்வுக் குழுவை நீக்குவோம். நீங்கள் ஒருவரை கேப்டனாக நியமித்தீர்கள் என்றால்,அவரை நீண்ட காலம் விளையாடுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும், அப்பொழுது தான் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். யாராக இருந்தாலும் தவறு செய்வார்கள், ஆனால் அதை வைத்துக்கொண்டு அவர்களை மாற்றுவது சரியான முறை கிடையாது, தவறுகளின் மீது கவனம் செலுத்தாமல் அவர் எதிர்கால இந்திய அணியை வழிநடத்துவதற்கு தயாரானவரா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டனை நியமிப்பது என்பது மிகப்பெரிய முட்டாள்தனம்” என்று இந்திய அணியின் முடிவை கபில்தேவ் கடுமையாக விமர்சித்தது மட்டுமில்லாமல் எச்சரிக்கையும் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *