தற்போது இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற, இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணியும் சமபலத்துடன் உள்ளதால், இந்த போட்டியை வெல்ல இரண்டு அணியும் முனைப்புடன் உள்ளது.
கான்பூர் மைதானத்தில் நடைபெரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே ஷிகர் தவான் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டது.
இதன் பிறகு ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இருவரும் சேர்ந்து எதிரணியின் பந்துவீச்சை நசுக்கிவிட்டார்கள். அற்புதமாக விளையாடிய ரோகித் சர்மா தனது 15வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் 83 ரன்னில் இருக்கும் போது, தனது சர்வதேச ஒருநாள் அரங்கில் 9000 ரன்னை கடந்தார். ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 9000 ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் (205 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளி, 194வது இன்னிங்சில் 9000 ரன் அடித்து இந்த சாதனைக்கு சொந்த காரர் ஆனார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.