ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முதல் போட்டி வருகிற அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
போட்டி நாள் நெருங்க நெருங்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று இரு அணிகளுக்கு மத்தியில் சண்டை ஏற்படுகிறதோ இல்லையோ, ஆனால் இது கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடத்தில் மிகப் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த மூன்று காரணத்தை வைத்து பாகிஸ்தான் அணி தான் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கான முதல் போட்டியில் வெற்றி பெறும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். அந்த மூன்று காரணங்களை இங்கு பார்ப்போம்.
பாகிஸ்தான் அணியின் பலமான பந்துவீச்சு
கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் நிச்சயம் தினம் என்று தெரிவித்துள்ளனர், குறிப்பாக இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மென்கள் ஆன கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இரு வீரர்களும் ஸ்டம்பின் உள்வரும் பந்துகளை எதிர்கொள்வதில் தடுமாறி வருகின்றனர்.
நிச்சயம் இதை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சகீன் அஃப்ரிடி நிச்சயம் பயன்படுத்திக்கொண்டு இந்திய அணிக்கு மிகப் பெரும் தொல்லையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி, இமாத் வாசிம், ஹரிஷ் ரவூப்,போன்ற போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் மற்றும் சதாப் கான்,முகமது ஹபீஸ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் அபார ஃபார்மில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
