முரட்டு ஃபார்ம்ல இருக்கான்... ஆனா அந்த பையனயே டீம்ல எடுக்காம விட்டீங்களே..? இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !! 1
முரட்டு ஃபார்ம்ல இருக்கான்… ஆனா அந்த பையனயே டீம்ல எடுக்காம விட்டீங்களே..? இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர்

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யசஸ்வி ஜெய்ஸ்வாலும் இடம்பெற்றிருக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தனது போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

முரட்டு ஃபார்ம்ல இருக்கான்... ஆனா அந்த பையனயே டீம்ல எடுக்காம விட்டீங்களே..? இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !! 2

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா, பிரசீத் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் சிலருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும், அதில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியுமே தற்போதைய கிரிக்கெட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என அனைவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

முரட்டு ஃபார்ம்ல இருக்கான்... ஆனா அந்த பையனயே டீம்ல எடுக்காம விட்டீங்களே..? இந்திய அணியை விமர்சித்த முன்னாள் வீரர் !! 3

அந்தவகையில், ஆசிய கோப்பை தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா, ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யசஸ்வி ஜெய்ஸ்வாலும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “விண்டீஸ் அணிக்கு எதிரான டி.20 மற்றும் டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய யசஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணி ஏன் இடம் கொடுக்கவில்லை என எனக்கு புரியவில்லை. ஜெய்ஸ்வால் தற்போது சிறப்பான பார்மில் உள்ளனர், நல்ல பார்மில் இருக்கும் ஒருவரை பயன்படுத்தி கொள்ள இந்திய அணி தவறிவிட்டது.  அதே போல் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தவறியிருந்தாலும், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஸ்ரேயஸ் ஐயரும், கே.எல் ராகுலும் தற்போது வரை காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை, ஆனால் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக பல போட்டிகளை சந்தித்து வருகிறார். ஆனால் இந்திய அணியோ சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது வேடிக்கையான விசயம் தான்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *