அடப்போங்கடா... மீண்டும் மிரட்ட காத்திருக்கும் மழை; போட்டி இன்றும் நடக்காவிட்டால் என்ன ஆகும்..? முழு விபரம் வெளியானது !! 1
அடப்போங்கடா… மீண்டும் மிரட்ட காத்திருக்கும் மழை; போட்டி இன்றும் நடக்காவிட்டால் என்ன ஆகும்..? முழு விபரம் வெளியானது

இந்தியா பாகிஸ்தான் இடையேயான இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை, இந்திய அணி எதிர்கொண்டது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தது ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியோ முழுமையாக நடக்கவில்லை. இரு அணிகள் இடையேயான போட்டியின் போது மழை குறுக்கிட்டு கொண்டே இருந்ததால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான முதல் போட்டியில் பாதியிலேயே முடித்து கொள்ளப்பட்டது.

அடப்போங்கடா... மீண்டும் மிரட்ட காத்திருக்கும் மழை; போட்டி இன்றும் நடக்காவிட்டால் என்ன ஆகும்..? முழு விபரம் வெளியானது !! 2

இதன்பின் இரு அணிகளும் நேப்பாள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, இதன் மூலம் இரண்டாவது சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதி பெற்றது. சூப்பர் 4 சுற்றிலும் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் செப்டம்பர் 10ம் தேதி மீண்டும் எதிர்கொண்டது.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியிலும் மழை குறுக்கிட்டு கொண்டே இருந்ததால் இந்த போட்டியும் பாதியில் முடிந்து கொள்ளப்பட்டது. இரு அணிகள் இடையேயான இந்த போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த போட்டி இன்று (11-9-23) மீண்டும் நடைபெற உள்ளது.

இந்திய அணி 24 ஓவர்களை எதிர்கொண்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள ஓவர்களை இன்றைய ஆட்டத்தில் எதிர்கொள்ள உள்ளது.

அடப்போங்கடா... மீண்டும் மிரட்ட காத்திருக்கும் மழை; போட்டி இன்றும் நடக்காவிட்டால் என்ன ஆகும்..? முழு விபரம் வெளியானது !! 3

இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் வானிலை அறிவிப்பின்படி இன்றைய ஆட்டத்தின் போது மழை குறுக்கிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மழை பெய்வதற்கு 99 சதவீத வாய்ப்புகள் இருப்பதால், இன்றைய ஆட்டமும் முழுமையாக நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

மழை குறுக்கிடாமல் மழை குறித்த நேரத்திற்கு துவங்கினால் போட்டி 50 ஓவர் போட்டியாகவே இருக்கும். ஒருவேளை போட்டி துவங்குவதற்கு பெரிய தாமதம் ஏற்பட்டால் 20ஓவர் போட்டியாக நடைபெறும். ஒருவேளை போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும்.

அடப்போங்கடா... மீண்டும் மிரட்ட காத்திருக்கும் மழை; போட்டி இன்றும் நடக்காவிட்டால் என்ன ஆகும்..? முழு விபரம் வெளியானது !! 4

பாகிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது, இதனால் இந்திய அணியுடனான போட்டி ரத்து செய்யப்பட்டால் அது பாகிஸ்தான் அணிக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தாது, ஆனால் போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு செல்லும்.

இந்திய அணி நாளை நடைபெற இருக்கும் தனது அடுத்த போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *