இந்திய அணி இப்படியொரு பிரச்சனையை வைத்திருக்கிறது. இதனால் உலக கோப்பையை வெல்வது கடினம் என்று உன்னால் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
உலக கோப்பை தொடருக்கு சென்றிருக்கும் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பின்னடைவாக இருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் இந்திய அணியில் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. போதிய வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இல்லை. ஒரே ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மட்டுமே 15 பேர் கொண்ட அணியில் இருக்கிறார்.
ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் சில மைதானங்களில் தேவைப்படும். அந்த சமயத்தில் இந்திய அணி சற்று பின்னடைவை சந்திக்க நேரிடலாம். தற்போது 15 பேர் கொண்ட அணியில் ஹர்திக் பாண்டியா மட்டுமே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருக்கிறார். அது தவிர பிளேயிங் லெவனில் 2 சுழல் பந்துவீச்சு மற்றும் 2 வேகப்கப்பந்துவீச்சு என எடுத்துக்கொண்டால், மொத்தம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களே அணியில் இருப்பர். மெல்பர்ன் மைதானம் முற்றிலும் வேகப்பந்து வீச்சிற்க்கு சாதகமாக இருக்கும். அதற்காக குறைந்தது 2 சுழல் பந்துவீச்சும் மிடில் ஓவர்களில் வேண்டும். இதுபோன்ற சமயத்தில் எப்படி இந்திய அணி சமாளிக்கும்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பிரச்சினை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன்.
“இந்திய அணி உலக தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு வீரரும் தனக்கான தனி முத்திரையை அணியில் பதித்து வருகின்றனர். பல்வேறு நாடுகள் இந்திய அணியின் கட்டமைப்பை கண்டு வியந்து தனது நாட்டிலும் அதுபோன்ற ஒன்றை உருவாக்க பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இந்திய அணிக்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்து வருகிறது. 7வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் இருக்க வேண்டுமா? அல்லது பந்துவீச்சாளர் இருக்க வேண்டுமா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி எவ்வித ஐசிசி கோப்பையையும் வெல்லாதது இதனால்தான். ஏழாவது இடத்தில் முழு பந்துவீச்சாளர் இருக்கிறார் அல்லது முழு பேட்ஸ்மேன் இருக்கிறார். ஒரு தரமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லை.
ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அவர் ஆறாவது இடத்தை நிரப்பி விளையாடுகிறார். ஏழாவது இடம் இன்றளவும் குறையாக தான் இருக்கிறது. இது போன்ற ஒரு சிக்கல் பாகிஸ்தான் அணியிலும் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி பின்னடைவை சந்தித்து உலக கோப்பையையும் இழக்க நேரிடலாம். எனது கணிப்பில் இம்முறை உலகக் கோப்பை இந்திய அணிக்கு கிடைக்காது.” என்றார்.