காயம் எல்லாம் சும்மா... அக்சர் பட்டேலுக்கு பதில் அஸ்வின் இதனால தான் வந்தார்! - சச்சின் டெண்டுல்கர் திடீர் பேச்சு! 1

உலகக் கோப்பை செல்லும் இந்திய அணியில் கடைசி நேரத்தில் அஸ்வின் எப்படி சேர்க்கப்பட்டார்? என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் ஜாம்பவான் சச்சின்.

உலகக்கோப்பைக்கு செல்லும் இந்திய வீரர்களின் பட்டியல் முதலாவதாக செப்டம்பர் மாதம் துவக்கத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டும் என்றால், செப்டம்பர் இறுதிவரை அவகாசம் எடுத்துக்கொண்டு மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி பல்வேறு நாடுகளும் தங்களது அணியை உறுதி செய்து செப்டம்பர் மாதம் இறுதியில் அறிவித்தது. இந்திய அணியும் முதலில் வெளியிட்ட பட்டியலில் இருந்து ஏதேனும் சில மாற்றங்களை செய்யுமா? என்று எதிர்பார்த்து இருந்தபோது, ஆசியக்கோப்பை தொடரின் போது காயமடைந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி நேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

காயம் எல்லாம் சும்மா... அக்சர் பட்டேலுக்கு பதில் அஸ்வின் இதனால தான் வந்தார்! - சச்சின் டெண்டுல்கர் திடீர் பேச்சு! 2

இதற்கு பல்வேறு வரவேற்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஏனெனில் அஸ்வின் போன்ற அனுபவம் மிக்க வீரர் மற்றும் இந்திய மைதானங்களை நன்கு அறிந்து வைத்திருக்கக்கூடிய ஒருவர் அணியில் இருப்பது கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது பிளேயிங் லெவனில் இடம்பெற்று சிறப்பாகவும் பந்து வீசினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போட்டியில் அஸ்வின் எடுக்கப்படவில்லை.

காயம் எல்லாம் சும்மா... அக்சர் பட்டேலுக்கு பதில் அஸ்வின் இதனால தான் வந்தார்! - சச்சின் டெண்டுல்கர் திடீர் பேச்சு! 3

இந்நிலையில் அஸ்வின் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வந்தது எப்படி? உண்மையில் அக்சர் பட்டேல் காயம் அடைந்ததால் அஸ்வின்-க்கு வாய்ப்பு கிடைத்ததா? என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறியதாவது:

“ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற அதீத அனுபவம் மிக்க ஒருவர் அணியில் இருப்பது கூடுதல் பலம். போட்டியின் கடைசி பந்து வரை போராடக்கூடிய வீரர்களுள் அஸ்வின் ஒருவர். எந்த கட்டத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் பந்து வீசுவார். வேறு வீரருக்கு பதிலாக அவர் வந்திருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து நான் பேசப்போவதில்லை. அவர் எடுக்கப்பட்டது முற்றிலும் சரியானது.

காயம் எல்லாம் சும்மா... அக்சர் பட்டேலுக்கு பதில் அஸ்வின் இதனால தான் வந்தார்! - சச்சின் டெண்டுல்கர் திடீர் பேச்சு! 4

மேலும் அவர் தனது அணுகுமுறையை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு இருப்பார். வெறுமனே பந்துவீச்சாளர் மட்டுமே என்று அவரை கருதக்கூடாது. கீழ் வரிசையில் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பையும் கொடுப்பார். இதன் காரணமாகத்தான் அஸ்வின் உள்ளே எடுக்கப்பட்டிருக்கிறார். மற்றபடி எவருக்கு பதிலாக அஸ்வின் எடுக்கப்பட்டார் என்று பேசுவது சரியாகாது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *