இந்திய அணி எடுத்த முட்டாள்தனமான முடிவு.... பேட்டிங்கும் வரல.. பீல்டிங்கும் வரல; தொடர்ந்து சொதப்பும் சிவம் துபே; வச்சு செய்யும் ரசிகர்கள் !! 1
இந்திய அணி எடுத்த முட்டாள்தனமான முடிவு…. பேட்டிங்கும் வரல.. பீல்டிங்கும் வரல; தொடர்ந்து சொதப்பும் சிவம் துபே; வச்சு செய்யும் ரசிகர்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே பேட்டிங்கில் சொதப்பியதோடு, பீல்டிங்கிலும் ஒரு இலகுவான கேட்சை கோட்டைவிட்டது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டி.20 உலகக்கோப்பை தொடரின் 19வது போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியுடம் மோதி வருகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா (13), ரிஷப் பண்ட் (42) மற்றும் அக்‌ஷர் பட்டேல் (20) ஆகிய மூவரை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியனர்.

ரிஷப் பண்ட்டை தவிர மிடில் ஆடரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஜடேஜா என இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் 19 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய சிவம் துபே கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பேட்டிங்கில் சொதப்பியதோடு மட்டும் இல்லாமல், பும்ராஹ்வின் பந்துவீச்சில் முகமது ரிஸ்வான் கொடுத்த இலகுவான கேட்ச்சையும் சிவம் துபே கோட்டைவிட்டதால் பொறுமை இழந்த இந்திய ரசிகர்கள், தங்களது சமூக வலைதள பக்கங்களின் மூலம் சிவம் துபேவை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரிங்கு சிங்கிற்கு பதிலாக சிவம் துபேவிற்கு இந்திய அணியில் இடம் கொடுத்த இந்திய அணியின் முடிவையும் கிரிக்கெட் ரசிகர்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதில் சில;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *