ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் வருகிற ஜூன் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென்ஆப்பிரிக்கா அணி 5 டி20போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவில் தொடர் தோல்வியை தழுவிய இந்திய அணி, அதற்கு பழிதீர்க்கும் வகையில் சிறப்பான ஒரு அணியை தேர்ந்தெடுத்து பழிவாங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்தத் தொடர் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னேற்பாடாக இருப்பதால் இந்தத் தொடரில் இந்திய அணி பல்வேறு விஷயங்களை பரிசோதித்துப் பார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நட்சத்திர வீரர்களாக இருந்தும் பார்ம் கa AAஇல்லாத வீரர்களுக்கு இந்த தொடரில் ஒருமுறை வாய்ப்பளித்து சோதித்து பார்க்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பரிசோதித்து பார்க்கவிருக்கும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
புவனேஷ்வர் குமார்
கடந்த கால இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த புவனேஸ்வர் குமார் தற்போது மிக மோசமாக பந்து வீசி வருகிறார்.
என்னதான் இவர் மோசமான ஃபார்மில் இருந்தாலும் இந்திய அணி இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கி கொண்டு தான் வருகிறது.இருந்தபோதும் எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் தான் இவருக்கு கடைசி வாய்ப்பு, அதனை இவர் பயன்படுத்தவில்லை என்றால் இவருடைய கிரிக்கெட் கரியர் அத்துடன் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
